உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க இதைச் சாப்பிடுங்க! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Wednesday, October 3, 2018

உடலில் சேரும் கெட்டக் கொழுப்பை கரைக்க இதைச் சாப்பிடுங்க!



உடலில் தேங்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்க பல வழிகள் உள்ளது. ஆனால் எவ்வித பக்கவிளைவுகளும் வராமல் இயற்கையான முறையில் கெட்ட கொழுப்பை கரைக்க சிறந்த உணவுப் பொருட்களைப் பற்றி பார்ப்போம்.
 
பூண்டு

பூண்டை நன்றாக வேக வைத்து பாலில் கலந்து காலை மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உடம்பில் கெட்ட கொழுப்பு குறைந்துவிடும்.

ஆப்பிள்

நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்ளான ஆப்பிள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை சேரவிடாமல் தடுக்கும்.


சோற்றுக் கற்றாழை

தினமும் காலை கற்றாழை ஜெல்லை எலுமிச்சை அளவு எடுத்து, வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடற்சூட்டுடன் கொழுப்பும் குறையும்.

கொள்ளு

கொள்ளுடன் சிறிது கறிவேப்பிலை சேர்த்து நன்றாக அரைத்து 2 டீஸ்பூன் அளவுக்கு எடுத்து சாதத்துடன் சேர்த்து நல்லெண்ணெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்பு காணாமல் போய்விடும்.


கறிவேப்பிலை

கறிவேப்பிலையுடன் சிறிது உளுந்து, புளி, உப்பு சேர்த்து துவையல் செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பு கரையும்

மிளகு

வாழைத்தண்டு சாறில் கரு மிளகை 48 மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு காய வைத்து பொடிக்கி இதனை உணவில் மிளகிற்கு பதிலாக இந்த பொடியை பயன்படுத்தினால் உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரைந்துவிடும்.


சீரகம்

தண்ணீருடன் 20 கிராம் சீரகத்தை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். இதை தண்ணீருக்குப் பதிலாக பயன்படுத்தினால் உடலில் கெட்டக் கொழுப்பு தங்காது.

இஞ்சி

இஞ்சியின் தோலை சீவி, ஏலக்காய் சிறிது சேர்த்து நன்றாக இடித்து 200 மில்லி தண்ணீர் சேர்த்து கொதிக்கவைத்து 50 மில்லியாக சுண்டியதும் இறக்கி குடிக்கவும்.

No comments: