Header Ads

Header ADS

பயன்தரும் முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்...!



முருங்கைக் கீரையில் வைட்டமின் , பி, சி சத்துக்களும், சுண்ணாம்புச்சத்து, புரதம், இரும்பு, கந்தகம், குளோரின், தாமிரம், கால்சியம், மெக்னீஷியம் போன்ற சத்துக்களும் உள்ளன. முருங்கை இலையினுடைய பொடியானது மூளையின் ஆரோக்கியத்துக்கு மிக்ப பெரிய அளவில் உதவுகின்றது. இது அல்சைமர் நோயைக் குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. இதில் உள்ள வைட்டமின் மற்றும் வைட்டமின் சி ஆகியவை மன வளம், நியாபக சக்தி ஆகியவற்றைப் பாதுகாக்க உதவுகிறது ஆஸ்துமா, மார்சளி, சைனஸ் போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை இலை ரசம் அல்லது சூப் மிகவும் நல்ல பலன் தரும். முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.
 
முருங்கை இலை சாறு இரத்தசுத்தி செய்வதுடன், எலும்புகளையும் வலுப்படுத்தும். கர்ப்பப்பையை வலுப்படுத்தும். தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். முருங்கை இலைச்சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து தடவ முகப்பருக்கள் மறையும்.
 
முருங்கை இலையினுடைய பொடியானது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றது. இது மிக முக்கியமாக ரத்தத்தில் உள்ள கொழுப்புகளைக் குறைக்க உதவுகின்றது. முருங்கை இலையில் உள்ள பாக்டீரீயா மற்றும் பூஞ்சை எதிர்ப்பு சக்தியானது, உங்களுடைய சருமத்தில் உண்டாகின்ற தொற்றுக்கள், பாக்டீரியாவினால் உண்டாகும் பிரச்சினைகள் போன்றவற்றில் இருந்து உங்களைக் காப்பாற்ற உதவுகிறது. இது சிறுநீர்ப் பாதையில் ஏற்படுகின்ற தொற்றுக்களைப் போக்கவும் உதவுகிறது.

முருங்கை கீரையை அடிக்கடி பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் பித்த மயக்கம், மலச்சிக்கல், கண்நோய் கபம், மந்தம் போன்றவை குணமாகும். உடல் சூடு அதிகம் உள்ளவர்கள் வாரத்தில் இரண்டு முறை முருங்கைகீரை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.