Header Ads

Header ADS

வாய்ப்புண்ணை குணமாக்கும் கோவைக்காய்



கோவைக்காயின் இலைகள், தண்டு, வேர், காய், கனி என அனைத்து பாகங்களும் மருத்துவ பயன்களை கொண்டுள்ளது. இவை தோல்நோய்கள் ஆகியவற்றை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது. நீரிழிவு நோய்க்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும்.நீரிழிவு நோயாளிகளின் இரத்தத்தில் சேரும் சர்க்கரை அளவைக் கோவைக்காய் கட்டுப்படுத்தும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
பரம்பரை காரணமாக நீரிழிவு நோய் இருப்பவர்கள் கோவைக்காயை 30 வயது முதலே உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. நீரிழிவு நோய் வராமல் தடுக்கலாம்.கோவைக்காயை வாரம் இரண்டு நாள் உணவில் சேர்த்தால் வாய்ப்புண் குணமாகும். பச்சையாகவே கோவைக்காயை மென்று துப்பிவிட்டாலே வாய்ப்புண் ஆறிடும். ஒரே ஒரு கோவைக்காயை எடுத்து மோருடன் அரைத்து குடித்தாலும் மேற்சொன்ன பலன்களை பெறலாம்.கோவைக்காய் இலை மற்றும் தண்டு கபத்தை வெளியேற்றும்.

வலி குறைக்கும். இலை, தண்டு, கசாயமானது மார்புச்சளி, சுவாசக்குழாய் அடைப்பு இவற்றிற்கு நல்ல மருந்தாகும். இலைகளை வெண்ணெய்யுடன் கலந்து புண்கள், பிற தோல் நோய்களை குணப்படுத்த உதவும்.கோவைப்பழம் கபத்தை உண்டாக்கும். சீக்கிரத்தில் ஜீரணமாகாது.

ஆனால் மூச்சு இரைத்தல், வாந்தி, வாய்வு, ரத்த சோகை, பித்தம், காமாலை முதலான பிரச்சினைகளை குணப்படுத்தும்.கடிகளால் ஏற்பட்ட காயங்களின் மீது கோவை இலையை அரைத்து வைத்துக் கட்டினால் புண் விரைவில் ஆறும்.கோவைக்காய் பித்தம், ரத்தப் பெருக்கு, வயிற்றில் உள்ள பூச்சி ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாகும். சுக்கில் எண்ணிலடங்கா நன்மைகள் சுக்குடன் சிறிது பால் சேர்த்து மையாக அரைத்து நன்கு சூடாக்கி இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும், வலியுள்ள கை கால் மூட்டுகளில் பூசி வர மூட்டுவலி முற்றிலும் குணமாகும்.சுக்கைத் தூள் செய்து எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இந்த அய்ந்தையும் இட்டு கசாயம் செய்து பருகி வர கடுஞ்சளி மூன்றே நாளில் குணமாகும்.சிறிது சுக்குடன் ஒரு வெற்றிலையை மென்று தின்றால் வாயுத் தொல்லை நீங்கும்.சுக்கு, வேப்பம்பட்டை இரண்டையும் சேர்த்து கசாயம் செய்து குடித்து வர ஆரம்ப நிலை வாதம் குணமாகும்.சுக்கில் சிறிது நீர் தெளித்து விழுதாக அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போய்விடும்.சுக்கு, கருப்பட்டி, மிளகு சேர்த்து சுக்கு நீர் காய்ச்சிக் குடித்து வர, உடல் அசதி சோர்வு நீங்கி சுறுசுறுப்பு ஏற்படும்.சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்து பொடியாக்கி தேனில் கலந்து சாப்பிட்டால் அலர்ஜி அகலும்.சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு சேர்த்து கசாயம் செய்து காலை, மாலை குடித்து வர மாந்தம் குணமாகும்.சுக்குடன் மிளகு சுண்ணாம்பு சேர்த்து மையாக அரைத்து பூசி வர தொண்டைக்கட்டு மாறும். குரல் இயல்பு நிலை பெறும்.சுக்குடன் சிறிது துளசி இலையை மென்று தின்றால் தொடர் வாந்தி, குமட்டல் நிற்கும்.சிறிது சுக்குடன் சின்ன வெங்காயத்தை வைத்து அரைத்து சாப்பிட்டால் மலக்குடலில் உள்ள தீமை தரும் கிருமிகள் அழியும்.சுக்குடன் கொத்துமல்லி இட்டு கசாயம் செய்து பருகினால் மூல நோய் தீரும்.சுக்கு, அதிமதுரம் இரண்டையும் தூள் செய்து தேனில் கலந்து சாப்பிட்டுவர குற்றிருமல் குணமாகும்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.