டீன்ஸ் மற்றும் ட்வீன்ஸ் பருவத்தில் தோன்றும் பருக்கள் மற்றும் இதர சரும பிரச்சினைகளை சமாளிப்பதற்கான 5 வழிகள்!
இளம்
தலைமுறையினர், சோஷியல் மீடியாவில் அழகாக காட்சியளிப்பதற்காக தங்களது சருமத்தை குறையின்றி வைத்து கொள்ள நினைகின்றனர். மாசு மற்றும் மன அழுத்தம் ஆகியவை அவர்களது பதின் பருவத்தை எட்டிய சருமத்துக்கு பெரும் சவாலாக விளங்குகின்றன.
"கடந்து செல்லும் காலகட்டம்' என்று கூறி இது பற்றி கவலையடைய தேவையில்லை என்று அவர்களுக்கு ஆறுதல் கூறுவது எளிதானது. ஆனால் பருக்களால் பாதிக்கப்பட்ட முகமும் வடுக்கள் நிறைந்த உடலும் ஒருவரது தன்னம்பிக்கை மற்றும் சுய மரியாதையை பெரிதும் பாதிப்படைய செய்யும். உங்களது டீன் ஏஜ் பிள்ளை தன்னம்பிக்கையுடன் வெளியே செல்ல உதவும் சில வழிகளை இங்கு நாம் காண்போம் -
- உங்களது அனுபவ அறிவை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
உங்களது டீனேஜ் பருவத்தில் அது போன்ற சிக்கல்களை எப்படி சமாளித்தீர்கள் மற்றும் உடல் மற்றும் மன ரீதியான அந்த அழுத்தத்தை எப்படி கையாண்டீர்கள் என்ற உங்களது அனுபவ அறிவினை அவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
உங்களது தாய் உங்களுக்கு கற்பித்த எளிமையான தீர்வுகளான - போதுமான உறக்கம், போதுமான தண்ணீர் அருந்துதுதல் மற்றும் தினமும் மூன்று முறையாவது முகம் கழுவுதல் - ஆகியவை கண்டிப்பாக பலனளிக்கும்.
- நல்ல பழக்கங்களை சிறு வயது முதலே கடைபிடித்தல்
முறையான சரும பராமரிப்பு நடைமுறைகளை தங்களது பதின் பருவம் முதலே கடைபிடிப்பது அவசியம். உடலில் போதிய நீர் சத்து, வெயிலில் செல்லும் போது முகம் மற்றும் கழுத்து பகுதிகளை கேப் மற்று ஸ்கார்ஃப் கொண்டு மறைத்தல் போன்ற பழக்கங்கள் பருக்கள் ஏற்படாமல் சருமத்தை காக்கும். அடிக்கடி கிளென்ஸ் செய்தல், உடலை சுத்தமாக வைத்திருப்பது ஆகியவை நல்ல பழக்கங்களாகும். தலை முடியில் பொடுகு ஏற்படாமல் இருக்க தலைக்கு ரெகுலராக குளிக்க வேண்டும் - ஏனெனில் பொடுகுகள் பருக்கள் தோன்ற காரணிகளாகின்றன.
- இயற்கையே சிறந்த தீர்வு
கடுமையான கெமிக்கல்கள் சருமத்துக்கு பாதிப்பையே ஏற்படுத்தும் எனவே இயற்கையான பொருட்கள் பாதுகாப்பானவை என்பதை உங்களது குழந்தைகளின் மனதில் பதிய வையுங்கள். கெமிக்கல்கள் நிறைந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் மஞ்சள், கற்றாழை மற்றும் வேப்பிலை போன்ற இயற்கை பொருட்கள் சருமத்துக்கு ஊட்டமளிப்பது மட்டுமன்றி பின்விளைவுகளையும் ஏற்படுத்துவதில்லை என்பதை அவர்களுக்கு விளக்குங்கள். Hamam சோப், போன்ற 100% தூய்மையான வேப்பெண்ணெய் மற்றும் துளசியின் நற்குணம் நிறைந்தவற்றை பயன்படுத்த செய்யுங்கள் - இவை இரண்டுமே கிருமி தொற்றுக்களில் இருந்து எப்போதும் அவர்களை காக்கும்.
- சரியான உணவினை உட்கொள்ளச் செய்யுங்கள்
சரியான டயட் அருமையான சருமத்துக்கு காரணமாகும். உங்களது டீன்னேஜ் பிள்ளைகள் ஜங்க் உணவுகளை தவிர்த்து சரிவிகித சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொண்டு சரும பிரச்சினைகளில் இருந்து விடுதலை பெறலாம். எண்ணெயில் பொரித்த உணவுகளை குறைத்து கீரைகள் மற்றும் பழங்களை உண்ண அவர்களை பழக்க வேண்டும். அவற்றில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்ஸ் பருக்களற்ற அப்பழுக்கற்ற சருமத்தை வழங்கிடும்.
- முறையான சுற்று சூழலை உருவாக்குங்கள்
அவர்களுக்கு முன்மாதிரியாக நீங்கள் திகழுங்கள். பதப்படுத்தப்பட்ட மற்றும் கேன் செய்த உணவுகளை சமையலறையில் இருந்து வெளியேற்றுங்கள். பாத்ரூமில் இயற்கையான ஹோம் கேர் பொருட்களை அடுக்குங்கள். ஆக்டிவ் ஆன உட்பொருட்கள் நிறைந்த சோப் மற்றும் காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்துங்கள். தினமும் உங்களது டீன் ஏஜ் பிள்ளைகள் உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்குவதை உறுதி செய்யுங்கள் - சுத்தமான காற்று மற்றும் நல்ல உடற்பயிற்சி சரும ஆரோக்கியத்துக்கு வழி வகுக்கும்!
டீன்
ஏஜ் பருவத்தில் ஆரோக்கியமான சருமத்தை பெறுவதற்கு மேலே கூறப்பட்ட குறிப்புகள் உதவும்.
No comments
Post a Comment