சத்துணவு ஊழியர்கள் இன்று முதல் வேலை நிறுத்தம் : 43,000 மையங்கள் இயங்காது-சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் மூலம் சமைக்கவும் -நாளொன்றுக்கு ரூ -221 ஊதியம் வழங்கவும் உத்தரவு
சத்துணவு ஊழியர்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று
முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால் 43 ஆயிரம் சத்துணவு மையங்கள் ஸ்தம்பிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சத்துணவு ஊழியர்கள், வரையறுக்கப்பட்ட குறைந்தப்பட்ச ஊதியம், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம், பணிக்கொடை, உணவு தயாரிப்பு செலவை உயர்த்துதல் உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி அக்டோபர் 25 முதல் காலவரையற்ற காத்திருப்புப் போராட்டத்தை துவக்கினர். இதில், அக்.,25, 26, 27 மூன்று நாட்கள் சத்துணவு ஊழியர்கள் குழந்தைகளுக்கு சமைக்கும் பணியை கவனித்தவாறே போராட்டத்திலும் பங்கேற்றனர்.தேனி மாவட்ட தலைவர் நிலவழகன் கூறுகையில், ''இன்று, அக்.,29 முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம்.
இதனால் மாநிலத்தில் உள்ள 43 ஆயிரம் சத்துணவு மைய குழந்தைகளுக்கு உணவு சமைக்கும் பணி ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது.,'' என்றார்.ஆசிரியர்கள் எதிர்ப்புஇதையடுத்து தமிழக அரசு 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள மையங்களுக்கு ஓராசிரியர், மற்ற மையங்களில் ஒரு தலைமை ஆசிரியர், ஆசிரியர் என சமைக்கும் பணிகளில் ஈடுபட அரசு உத்தரவிட்டது. இதற்கு ஆசிரியர் சங்கங்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
No comments
Post a Comment