பிளஸ் 2 ஆங்கில வினாத்தாளில் மாற்றம் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, October 8, 2018

பிளஸ் 2 ஆங்கில வினாத்தாளில் மாற்றம்



மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.., சார்பில், 10 மற்றும், பிளஸ் 2 வகுப்புகளுக்கு, பொது தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பொது தேர்வு வினாத்தாள், தேர்வுக்கான மதிப்பெண், விடை திருத்தும் முறை உள்ளிட்டவற்றில் மாற்றம் வந்தால், அவற்றை, சி.பி.எஸ்.., முன்கூட்டியே அறிவிக்கும்.

இதன்படி, இந்த ஆண்டு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 ஆங்கில பாட வினாத்தாளில், பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.இதுவரை, 40 கேள்விகள் கேட்கப்பட்ட நிலையில், இனி, 35 கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

 
இதில், இரண்டு வகைகளாக கேள்விகள் இடம் பெற உள்ளன.முதல் வகையில், சரியான விடையை தேர்வு செய்யும், ஐந்து கேள்விகள் இடம் பெறுகின்றன. மிக குறுகிய விடை அளிக்கும் வகையில், ஒன்பது கேள்விகள்; குறுகிய விடையளிக்கும் மூன்று கேள்விகள்; விரிவான விடையளிக்கும் இரண்டு கேள்விகள் இடம் பெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாதிரி வினாத்தாளை, சி.பி.எஸ்..,யின், http://cbseacademic.nic.in/ என்ற, இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

No comments: