Header Ads

Header ADS

ஆரம்ப பள்ளிக்கு புதிய கட்டிடம் வேண்டும் கிராம சபை கூட்டத்தில் 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை (பத்திரிகை செய்தி) 








திருவண்ணாமலை வந்தவாசி அடுத்த சளுக்கை கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும் என்று 2-ம் வகுப்பு மாணவி கோரிக்கை விடுத்துள்ளார்.
 
காந்தி ஜெயந்தியையொட்டி, தி.மலை மாவட்டம் கீழ்பென்னாத் தூர் அடுத்த செல்லங்குப்பம் ஊராட்சியில் நேற்று முன்தினம் கிராம சபை கூட்டம் நடைபெற் றது. ஊராட்சி ஒன்றிய ஆணையா ளர் லட்சுமி நரசிம்மன் தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாள ராக ஆட்சியரின் நேர்முக உதவியா ளர் (வளர்ச்சி) குமாரி பங்கேற்றார். கூட்டத்தில், பிளாஸ்டிக் பயன்படுத் துவதை தவிர்த்தல், குடிநீரை சிக்க னமாக பயன்படுத்துதல், சுகாதா ரத்தை கடைபிடித்தல் போன்றவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இதேபோல, வந்தவாசி அடுத்த சளுக்கை ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி தலைமை வகித்தார். கழிவுநீர் கால்வாய், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தடையில்லாமல் செய்து கொடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். மேலும் 2-ம் வகுப்பு படிக்கும் மாணவி மகாலட்சுமி,' தான் படிக்கும் ஆரம்பப் பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்தார். அதற்கு பதில் அளித்த வட்டார வளர்ச்சி அலுவலர் குப்புசாமி, ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.