புதிய பாடத்திட்டத்தில் தூங்குவதற்கு 2 மணிநேரம் ஒதுக்கி வரைவு திட்டம் வெளியீடு! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Friday, October 19, 2018

புதிய பாடத்திட்டத்தில் தூங்குவதற்கு 2 மணிநேரம் ஒதுக்கி வரைவு திட்டம் வெளியீடு!



மழலையருக்கான, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளில் துாங்குவதற்கு, இரண்டுமணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும், ஒன்றாம் வகுப்புக்கு முந்தைய, கே.ஜி., வகுப்புகளுக்கு, ஒரே மாதிரியான பாடத்திட்டம் இருக்க வேண்டும் என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
 
இதையொட்டி, என்.சி..ஆர்.டி., என்ற, தேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் தயாரித்துள்ள, பாட திட்டத்தை பின்பற்றி, தமிழக பள்ளி கல்வி துறையும், புதிய பாடத்திட்டம் தயாரித்து உள்ளது.இதற்கான வரைவு பாட திட்டத்தை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி..ஆர்.டி., வெளியிட்டுள்ளது.இந்த பாடத்திட்டத்தில், ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., - யு.கே.ஜி., ஆகிய மழலையர் வகுப்புகளுக்கு, என்னென்ன பாடங்கள் கற்று தர வேண்டும்.மாணவ, மாணவியருக்கு, வகுப்பில் எடுக்க வேண்டிய பாடங்கள் என்ன என்ற, விபரங்கள் இடம் பெற்றுள்ளன.
 
அதேபோல், கே.ஜி., குழந்தைகளுக்கு, வகுப்புகள் நடக்கும் நேரம்குறித்தும், பட்டியல்வெளியிடப்பட்டுள்ளது.இந்த பட்டியலின்படி, காலை, 9:30 மணிக்கு வகுப்புகள் துவங்கும்; பகல், 12:30 மணிக்கு, மதிய உணவு நேரம் ஒதுக்கப்படும்.அதன்படி பகல், 1:00 மணி முதல், 3:00 மணி வரை, ப்ரீ கே.ஜி., - எல்.கே.ஜி., மற்றும் யு.கே.ஜி., குழந்தைகளுக்கு, துாங்குவதற்கு நேரம் ஒதுக்க வேண்டும் என, கூறப்பட்டுள்ளது.
 
அதாவது பள்ளியிலேயே, இரண்டு மணி நேரம், குழந்தைகளை துாங்க வைத்து விட்டு, மீண்டும் பாடங்கள் நடத்தி, மாலை, 4:00 மணிக்கு வகுப்பை முடிக்க, திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, தொடக்க கல்வி துறை சார்பில், மழலையர் பள்ளிகளுக்கு, இதேபோன்ற பாட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு, அதை, எந்த பள்ளியும் நடைமுறைபடுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: