கேள்விக்குறியாகும் அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனம்!: 2015-இல் தொடங்கப்பட்டு ஒருவர் கூட படிக்கவில்லை....!!
நாகை
மாவட்டம், வேதாரண்யத்தில் 2015 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, ஒருவர் கூட படிக்காத அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தின் நோக்கம் கேள்விக்குறியாகி வருவது, சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. இந்த
பயிற்சி நிறுவனத்துக்காக ரூ. 2.45 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடம் பயன்பாடின்றி போகுமோ? என்ற நிலையும் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் கல்வி மேம்பாட்டுக்காக இடைநிலை ஆசிரியர்களை உருவாக்கும் நோக்கத்தோடு 2015- ஆம் ஆண்டு அப்போதைய மாநில அரசு புதிய திட்டத்தை உருவாக்கியது.
ஒன்றிய நிலையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களை தொடங்கி நடத்தவும், முதல்கட்டமாக மாநிலத்தில் 7 இடங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.
No comments
Post a Comment