ஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை ரூ. 200 தள்ளுபடியுடன் துவக்கம்!
ஜியோ
போன் 2 பிளாஷ் விற்பனை
ஜியோ
போன் 2 பிளாஷ் முழுக்க QWERTY keypad அமைப்பு கொண்டது. இன்று விற்பனைக்கு வந்துள்ள இந்த போனை பே டிஎம்மில் வாங்கினால் ரூ. 200 தள்ளுபடி கிடைக்கும். ஜியோ போன் 2 விலை ரூ. 2,999. டெலிவரி சார்ஜ் ஆக ரூ. 99 செலுத்த வேண்டும். மொத்த விலை ரூ. 3,098.
2.40 இஞ்ச டிஸ்பிளே, 240 X 320 பிக்சல்ஸ் கொண்டது. மேலும், 512 ராம் கொண்டது. இந்த போன் 4GB ஸ்டோரேஜ் கொண்டது என்றாலும், மைரோ எஸ்டி கார்டு மூலம் ஸ்டோரேஜை 128GB ஆக அதிகரித்துக் கொள்ளலாம். பின்பக்கம் இரண்டு பிரைமரி கேமராவும், செல்பி எடுக்க முன் பக்கம் ஒரு கேமராவும் உள்ளன. வைபை, யூடியூப் மற்றும் பேஸ்புக் என அனைத்து ஆப்களையும் இந்த போனிலும் பெறலாம். தற்போது இந்தப் போனில் வாட்ஸ் ஆப் பெறும் வசதியும் உள்ளது.
ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அந்த நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானி, ''நாடு முழுவதும் தற்போது 25 மில்லியன் பேர் ஜியோ போன் பயன்படுத்தி வருகின்றனர். கூடுதல் வசதிகளுடன் இது விரைவில் 100 மில்லியன்களாக அதிகரிக்கப்படும்'' என்று தெரிவித்து இருந்தார்.
இந்த
போனை வாங்க விரும்புபவர்கள் jio.com என்ற இணையத்தில் பதிவு செய்யலாம். 5 முதல் 7 நாட்களில் கிடைத்துவிடும்.
No comments
Post a Comment