TNPSC.-க்கு கை கொடுத்த "ஆன்-லைன்': 7 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணம் சேமிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, September 9, 2018

TNPSC.-க்கு கை கொடுத்த "ஆன்-லைன்': 7 ஆண்டுகளில் பல கோடி ரூபாய் பணம் சேமிப்பு


தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (டி.என்.பி.எஸ்.சி.) ஆன்-லைன் முறை காரணமாக ரூ.100 கோடி வரை சேமிக்கப்பட்டுள்ளது. ஆன்-லைன் முறை வழியாக 139-க்கும் அதிகமான தேர்வுகளின் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு அவை நடத்தப்பட்டுள்ளன.

 குரூப் 1, குரூப் 2 உள்பட பல முக்கிய அரசுத் துறைத் தேர்வுகளை நடத்தும் பொறுப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் கடந்த பல ஆண்டுகளாக நடத்தி வருகிறது. இந்தத் தேர்வுகளுக்கு அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, அதற்கான விண்ணப்பங்கள் அனைத்தும் காகிதத்தால் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டு வந்தன.

 இந்த விண்ணப்ப முறையில் .எம்.ஆர். எனப்படும் கணினி வழி ஆய்வு செய்யும் காகிதமும் இணைக்கப்பட்டு தேர்வர்களுக்கு அளிக்கப்பட்டன. இதனால், குரூப் 2, குரூப் 4, கிராம நிர்வாக அலுவலர் போன்ற தேர்வுகளை நடத்தும் லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டன.
 ஆன்-லைன் முறை: காகித முறையிலான விண்ணப்ப முறைக்கு மாறாக, ஆன்-லைன் முறையில் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் நடைமுறையை டி.என்.பி.எஸ்.சி. அறிமுகப்படுத்தியது. இந்த முறை கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரியில் செயலாக்கத்துக்கு வந்தது.


 ஆன்-லைன் தேர்வு முறை காரணமாக, தேர்வர்கள் அனைத்துத் தேர்வுகளையும் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தின் வழியாக விண்ணப்பம் செய்து வருகிறார்கள். இந்தத் தேர்வு முறையால் தேர்வர்கள் எளிமையான முறையில் விண்ணப்பிப்பது மட்டுமின்றி, அரசுக்கும் பெருமளவு செலவுகள் குறைந்துள்ளன.

 இது குறித்து டி.என்.பி.எஸ்.சி., வட்டாரங்கள் கூறியதாவது:-டி.என்.பி.எஸ்.சி. தேர்வு வரலாற்றில் மைல்கல்லாக கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ஆன்-லைன் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. கடந்த ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலகட்டத்தில் 139 தேர்வுகளுக்கான அறிவிக்கைகளும், அதற்கான விண்ணப்பங்களும், தேர்வு முடிவுகளும் இணையதளத்திலேயே வெளியிடப்பட்டன.

No comments: