PHD பட்டம் பெற மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - அண்ணா பல்கலை நிபந்தனை ! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, September 3, 2018

PHD பட்டம் பெற மாணவர் ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு - அண்ணா பல்கலை நிபந்தனை !


பி.ஹெச்.டி பட்டம் பெற மாணவர்
ஒருவருக்கு வழிகாட்டியாக செயல்பட்டால்தான் பேராசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்ற புதிய விதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அமலாக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து பல்கலைக்கழக ஆட்சி மன்ற கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பி.ஹெச்.டி பட்டம் பெற லஞ்சம் பெறப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்தும் ஆட்சி மன்ற கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே புதிய விதியை அமல்படுத்த வேண்டும் என்ற முன்னாள் துணைவேந்தர் கலாநிதி வலியுறுத்தியுள்ளார்.
புதிதாக பணியமர்த்தப்பட உள்ள பேராசியர்களுக்கு பொருந்தும் வகையில் புதிய விதியை நடைமுறை படுத்தலாம் என்று மற்றொரு  முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் தெரிவித்துள்ளார். தற்போது உள்ள பேராசிரியர்களை புதிய விதி பாதிக்கப்பட கூடாது என்று தெரிவித்துள்ளார். அண்ணா பல்கலைக்கழக மறுமதிப்பீட்டுக்கு லஞ்சம் பெற்றதை போல பி.ஹெச்.டி பட்டம் பெற லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரை விசாரிக்கும்படி கோரிக்கை எழுந்துள்ளது. புதிய விதிகளை அமல்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தை ஐஐடிக்கு இணையாக தரம் உயர்த்த வேண்டும் என்றும் முன்னாள் துணை வேந்தர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments: