PF - வருங்கால வைப்பு நிதி கணக்கில் ரூ. 6 லட்சத்திற்கான ஆயுள் காப்பீடு உள்ளது என்று உங்களுக்குத் தெரியுமா?
ஒரு
நிறுவனத்தில் ஊழியர் வேலை பார்க்கும் போது அவர்களுக்குப் பிஎப், மருத்துவக் காப்பீடு, பயணப்படி, பொழுதுபோக்கு படி போன்ற நன்மைகள் அளிப்பார்கள். ஆனால் அவர்கள் அளிக்கும் பிஎப் கணக்கில் உள்ள 6 லட்சம்
ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு பற்றி மட்டும் பலருக்குத் தெரியாது.
1976-ம் ஆண்டு முதல் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கை நிர்வகித்து வருபவர்களுக்கு EDLI எனப்படும் பணியாளர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்புறுதி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பிஎப் கணக்கு வைத்துள்ள எல்லா ஊழியர்களும் பயன்பெறமுடியும்.
எப்படி இந்தக் காப்பீட்டிற்கான பங்களிப்பை அளிப்பது?
ஊழியர்கள் வைப்பு நிதி கணக்கு வைத்துள்ளவர்களுக்கு எப்படி ஈபிஎஸ் எனப்படும் பென்ஷன் பங்களிப்புப் பிடித்தம் செய்யப்படுகிறதோ அதே போன்று EDLI-க்கான பிரீமியமும் செலுத்தப்படுகிறது.
EDLI பிரீமியத்தினை எப்படிச் செலுத்துவது?
EDLI பிரீமியத்திற்கான தொகை நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் இருந்து எடுத்துக்கொள்ளப்படும். பிஎப் சந்தார்களின் சம்பளத்தில் இருந்து இதற்காக எந்தக் கூடுதல் தோகையும் பிடித்தம் செய்யப்பட மட்டாது.
நிறுவனங்கள் உங்களுக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பு எப்படிப் பிரிகிறது?
பிஎப் கணக்கில் ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 12 சதவீதமும், நிறுவனம் சார்பில் 12 சதவீதமும் செலுத்தப்படும் என்றும் பொதுவாக நாம் அறிவோம். ஆனால் நிறுவனம் நமக்கு அளிக்கும் பிஎப் பங்களிப்பில் 8.33 சதவீதம் பென்ஷனுக்காகவும், 3.67 சதவீதம் ஈபிஎப் பங்களிப்பு, 0.51 சதவீதம் EDLI பிரீமியம், 0.85% ஈபிஎப் அட்மின் கட்டணங்கள், 0.01% EDLI கட்டணங்களாகச் செல்கிறது.
EDLI காப்பீடு எப்படிக் கணக்கிட்டு அளிக்கப்படுகிறது?
EDLI காப்பீடு பிஎப் சந்தாதார் இறந்த பிறகு அவரது 30 மடங்கு அடிப்படை சம்பளம் + அகவிலைப்படியைக் கணக்கிட்டு அளிக்கப்படும். அது மட்டும் இல்லாமல் பொனஸ் தொகையாக 1,50,000 ரூபாய் அளிக்கப்படும். காப்பீடு பிரீமியம் தொகை அனைவருக்கும் சமமானதே ஆகும்.
பிஎப் சந்தாதார் இறக்க நேர்ந்தால் EDLI காப்பீடு தொகையைப் பெறுவது எப்படி?
ஈபிஎப் கணக்குச் சந்தாதரகள் இறக்க நேர்ந்தால் நாமினிக்கள் இந்தக் காப்பீட்டுப் பணத்தினைத் திரும்பப் பெற முடியும். ஒருவேலை நாமினி இல்லை என்றால் சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் காப்பீடு தொகையினைத் திரும்பப்பெறலாம்.
அதற்கு நாமினி அல்லது சட்டப்பூர்வமான குடும்ப உறுப்பினர்கள் படிவம் 5-ஐ பூர்த்திச் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
காப்பீடு தொகையைத் திரும்பப் பெறும் போது கவணிக்க வேண்டியவை?
EDLI காப்பீட்டினை பெறும் போது பிஎப் சந்தாரர் இறக்கும் வரை நிறுவனத்தில் பணிபுரிந்து வந்து இருக்க வேண்டும். படிவத்தில் நிறுவனத்தின் அத்தாட்சி இருக்க வேண்டும். நிறுவனத்தில் அத்தாட்சி பெற முடியவில்லை என்றால் கெசட் அலுவலரிடம் பெறலாம்.
தேவையான ஆவணங்கள்
1) இறப்புச் சான்றிதழ்
2) நாமிக்கள் மேஜராக இல்லாத போது பாதுகாவலர் நிலை சான்றிதழ் கட்டாயம்.
3) கேன்சல் செய்யப்பட்ட செக்
உதாரணம்
பாபுவின் மாத சம்பளம் 15,000 ரூபாய். ஈபிஎப், ஈபிஎஸ், EDLI திட்டங்களில் இவரது பெயரில் பங்களிப்புகள் உள்ளது. பணிக் காலத்தில் இவர் இறந்துவிடுகிறார். இவரது நாமினி EDLI காப்பீடு தொகையினைப் பெற முயலும் போது (30 x Rs.15,000) + (Rs.1,50,000) =
Rs.6,00,000 அல்லது இதற்கு இணையான ஒரு தொகையினைக் காப்பீடாகப் பெறலாம்.
No comments
Post a Comment