EMIS பணி 100% மிகச் சரியாகவும், மிக எளிமையாகவும் செய்வதற்கான சில ஆலோசனைகள்: - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 1, 2018

EMIS பணி 100% மிகச் சரியாகவும், மிக எளிமையாகவும் செய்வதற்கான சில ஆலோசனைகள்:



EMIS வேலையை ஆசிரியர்களிடம் தருவதை விட BRTE யிடம் ஒப்படைக்கலாம்.
 
 கிட்டத்தட்ட45,000 பள்ளிகளிலிருந்து சுமார் 60,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் எமிஸ் இணையதளத்தில் உள்ளீடு செய்ய முனைவதால், சர்வர் மெதுவாக இயங்குகிறது. இதனால் யாருமே தகவல்களை உள்ளீடு செய்ய இயல வில்லை.

ஒரு மாதம் ஆசிரியப் பயிற்றுநர்கள் பள்ளிப் பார்வையை தவிர்த்து விட்டு, எமிஸ் பணியை செய்தால் (3500 ஆசிரியப் பயிற்றுநர்கள் மட்டுமே) எமிஸ் இணைய தளம் விரைவாக இயங்கும்.

 தகவல்கள் மிகச் சரியாக உள்ளீடு செய்யப்படும்.

 ஆசிரியர்களின் கற்பித்தல் பணி பாதிக்கப்படாது.

முதல் வகுப்பில் அனைத்துத் தகவல்களும் மிகச் சரியாக உள்ளீடு செய்தால், பிறகு தவறு ஏற்பட வாய்ப்பில்லை.

 மாணவரின் ஆதார் எண்ணை சுகாதாரத் துறை மற்றும் வருவாய்த்துறை இணைய தளங்களுடன் இணைப்பதன் மூலம், சாதிச் சான்று, இரத்தவகை இவைகளை சம்மந்த பட்ட துறையினரே இணையத்தில் பதிவேற்றலாம்.

பள்ளி மருத்துவ முகாமின் போது இரத்த பரிசோதனை செய்து அவர்களே இணையத்தில் பதிவு செய்யலாம்.

சாதிச் சான்றுக்கான விவரங்களை பள்ளிகளிலிருந்து கிராம நிர்வாக அலுவலர்கள் பெற்று ஜுலைக்குள் சாதிச் சான்றினை இணைய தளம் மூலம் வழங்கி, இவற்றை எமிஸ் இணையத்திலேயே பதிவிட அறிவுறுத்தலாம்.

 மாணவர்களின் புகைப்படம் 1,3,6,9,11 வகுப்புகளில் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதுமானது என்ற நிலையை ஏற்படுத்தலாம்.

பல ஆசிரியர்கள் எமிஸ் இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்ய தெரியாத காரணத்தால், கணினி மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்வதால் தவறுகள் நிகழ்கின்றன.

ஒரு ஆசிரியப் பயிற்றுநருக்கு சுமார் 10 பள்ளிகள் தான் உள்ளன.

இந்த பள்ளிகளில் புதிய மாணவர் சேர்க்கை, விலகல் பற்றிய விவரங்களை தலைமை ஆசிரியர், ஆசிரியர் பயிற்றுநரிடம் உரிய படிவத்தில் புகைப்படத்துடன் பூர்த்தி செய்து வழங்குவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இணைய தளத்தில் மாணவரை சேர்த்தல், நீக்குதல், தகவல்களை சரி பார்த்தல் தகவல்களை திருத்துதல் இவைகளை ஆசிரியர் பயிற்றுநரிடம் ஒப்படைக்க வேண்டும்.

 ஜுலை மாதம் முழுவதும் ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு பள்ளிப் பார்வை பணி அளிக்காமல், எமிஸ் பணிக்கு மட்டுமே ஒதுக்க வேண்டும்.

 

 ஆசிரியப் பயிற்றுநர்களுக்கு கற்பித்தல் பணி இல்லை என்பதால் கற்றல் கற்பித்தலில் எந்த தொய்வும் இருக்காது.

மேலும் வட்டார வள மையத்தில் கணினி மற்றும் இணைய வசதிகள் இருப்பதால் தகவல்களை உள்ளீடு செய்ய வசதியாக இருக்கும்.

கல்வித்துறை இதற்கு ஆவன செய்யுமா? என ஆசிரியர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

No comments: