வாரம் ஒருமுறை ஏலக்காய் தண்ணீர்! நன்மைகளோ ஏராளம்
ஏலக்காயில் புரதம், மாவுச்சத்து, நார்ச்சத்து, கால்சியம் உட்பட பல்வேறு முக்கியமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.
ஏலக்காய் நீர் தயாரிக்கும் முறை
முதலில் 5-6 ஏலக்காயை தட்டி வைத்துக் கொண்டு பின் அதனை ஒரு கிராம்பு சேர்த்து தண்ணீரில் போட்டு 15- 20 நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பின்னர் அதனை நன்றாக ஆற வைத்து அதனுடன் சிறிதளவு தண்ணீரைக் கலந்து குடிக்கலாம். வேண்டுமானால் சுவைக்கு எலுமிச்சை சாறு அல்லது தேன் கலந்து கொள்ளலாம்.
ஏலக்காய் நீர் குடிப்பதினால் உண்டாகும் நன்மைகள்
செரிமானம்
இந்த
தண்ணீர் குடிப்பதினால் உணவு விரைவாக செரிமானம் அடையும். மேலும் இந்த நீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு குடித்து வர மலச்சிக்கல் பிரச்சனை இருக்காது.
நச்சுக்கள்
ஏலக்காய் நீர் தினமும் பருகுவதினால் அவை நம் உடலில் சேர்ந்திருக்கும் அதிகப்படியான நச்சுக்கள் நீக்க உதவுகின்றன.
பற்களுக்கு
பற்களில், ஈறுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று மற்றும் வாய்ப்புண்களை ஏலக்காய் போக்கும்.
நோய்
எதிர்ப்பு சக்தி
ஏலக்காய் நீர் குடிப்பதினால் நம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க முடியும். தொண்டைப் பிரச்சனைகள், வைரஸ் காய்ச்சல் ஆகியவை குணமாகும். காய்ச்சல் தலைவலி ஏற்படும் போது அதன் ஆரம்ப கட்டத்திலேயே இந்நீரை குடிப்பது மிகவும் நல்லது.
வயதான தோற்றம்
ஏலாக்காயில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் நிறைந்திருக்கின்றன. இது நம் உடலில் இருக்கும் செல்களின் உற்பத்திக்கும் அவற்றின் வளர்ச்சிக்கும் பெரிதும் உதவி என்றும் இளமையுடன் இருக்க உதவுகின்றன.
ரத்த
சோகை
பெண்
குழந்தைகளுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காததால் ரத்த சோகையினால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.இவர்கள் தினமும் ஏலக்காய் நீர் குடிப்பதினால் ரத்த சோகை வரமால் தடுக்கலாம்.
தொடர் இருமல்
சளித்தொல்லை அல்லது இருமல் ஏற்பட்டால் இந்த நீரை குடித்தால் உடனடி பலன் கிடைக்கும்.
No comments
Post a Comment