நாகர்கோவில் மாநகராட்சி ஆகிறது.. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவிப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்ட தலைநகர் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
அறிவித்துள்ளார்.
நாகர்கோவிலில் இன்று எம்ஜிஆர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதையொட்டி அங்கு முதல்வர் பேசுகையில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தற்போது எல்லை பிரிப்பு குறித்து ஆய்வு நடந்து வருவதாகவும், அது முடிந்ததும் தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியாகும் என்றும் முதல்வர் தெரிவித்தார். நாகர்கோவில் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டால் அது தமிழகத்தின் 13வது மாநகராட்சியாக இருக்கும். தனது பேச்சின்போது கன்னியாகுமரி மாவட்டம் தொடர்பான பல அறிவிப்புகளையும் முதல்வர் வெளியிட்டார். அதில் முக்கியமானது கன்னியாகுமரி அரசு மருத்துவமனையின் மாணவர் இடங்கள் 100 என்பதிலிருந்து 150 ஆக உயர்த்தப்படும் என்பதாகும்.
No comments
Post a Comment