தைராய்டு தாக்குவதற்கு முக்கிய காரணம் - உண்ணும் உணவு!
பெண்களை அதிகளவில் தைராய்டு தாக்குவதற்கு முக்கிய காரணம் அவர்கள் உண்ணும் உணவு மற்றும் ஹார்மோன் பிரச்சனைகளால் ஏற்படுகின்றன.
அத்தகைய தைராய்டு பிரச்சனையை இருப்பவர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய உணவுகள் எவை என்று பார்ப்போம்.
பால்
பொருட்கள்
கால்சியம் அதிகம் நிறைந்த பால் சம்பந்தப்பட்ட உணவுப் பொருளை முடிந்த வரையில் தவிர்க்க வேண்டும். பால் குடிப்பதால் மூன்றில் ஒரு பங்கு அயோடின் தேவையை பூர்த்தி செய்துகொள்ள முடியும். அதே சமயம் கொழுப்பு நீக்கப்பட்ட பாலை குடிப்பது நல்லது.
ஆல்கஹால்
தைராய்டு பிரச்சனை இருந்தால, ஆல்கஹாலை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏனெனில் இது தைராய்டு சுரப்பியையே பாதிக்கும்.
பேக்கரி உணவுகள்
பிரெட் போன்ற பேக்கரி வகை உணவுகளில் ஓரளவு அயோடின் இருந்தாலும், செரிமானம் உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்தி தைராய்டு சுரப்பில் பாதிப்பை உண்டாக்கும். எனவே பேக்கரிப் பொருட்களை தவிர்ப்பதும் நல்லது.
முட்டைக் கோஸ், காலிஃப்ளவர்
அயோடின் உறிஞ்சும் தன்மைக் கொண்ட முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் போன்ற காய்கறிகள் ஹார்மோன்களில் ஏற்றத்தாழ்வுகளை உண்டாக்கும். எனவே, முடிந்த வரையில் இந்த மாதிரியான காய்கறிகளை தவிர்க்க வேண்டும்.
மயோனைஸ் மற்றும் வெண்ணெய்
இந்த
உணவுகளில் கொழுப்புக்கள் அதிகம் நிறைந்த உள்ளதால் இந்த உணவுகளை உட்கொண்டால், அவை தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டில் இடையூறு ஏற்பட்டு, அதனால் தைராக்ஸின் ஹார்மோனின் அளவு மேலும் குறையும்.
சர்க்கரைவள்ளிக் கிழங்கு மற்றும் சோளம்
சோளம், ஆளி விதை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு போன்றவற்றில் சல்பர் அதிகம் உள்ளதால் இந்த உணவுப் பொருட்கள் தைராய்டு சுரப்பியால் அயோடினை உறிஞ்ச முடியாமல் செய்யும். ஆகவே இவற்றைத் தவிர்ப்பதும் நல்லது.
அதிகப்படியான நார்ச்சத்து
நார்ச்சத்து அதிகம் நிறைந்திருக்கும் உணவுப் பொருட்களான தானியங்கள், பழங்கள், காய்கறிகளை அதிக அளவில் ஹைப்போ தைராய்டு உள்ளவர்கள் எடுக்கக்கூடாது.
No comments
Post a Comment