Header Ads

Header ADS

வேலைவாய்ப்பு வழங்கும் முக்கியத் துறைகள்!


நாட்டின் முக்கியத் துறைகளின் பணியமர்த்தும் விகிதம் கடந்த 3 ஆண்டுகளைக் காட்டிலும் இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் அதிகரித்துள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று கூறியுள்ளது.
இதுகுறித்து டைம்ஸ்ஜாப்ஸ் ரெக்ரியூட் எக்ஸ் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், ’10 முக்கிய துறைகளில் இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலத்தில் பணியமர்த்தும் விகிதம் உயர்வைக் கண்டுள்ளது. சில்லறை வர்த்தகம் 19 விழுக்காடும், சுகாதாரம் மற்றும் மருந்துகள் துறை 10 விழுக்காடும், வங்கி, நிதி மற்றும் காப்பீட்டுத் துறையில் 9 விழுக்காடும், வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் துறை 7 விழுக்காடும், பி.பி.. மற்றும் .டி துறை 5 விழுக்காடும் வளர்ச்சி கண்டுள்ளன. இந்தத் துறைகளில் திறமைக்கு அதிக தேவை காணப்படுகிறது.'
 
கடந்த ஆண்டின் இதே காலத்தில் வளர்ச்சி கண்ட துறைகளாக நுகர்வோர் பொருட்கள், ஆட்டோமொபைல், உள்கட்டுமானம், பி.பி.. மற்றும் ஐடி ஆகிய துறைகள் இருந்தன. இதுகுறித்து டைம்ஸ்ஜாப்ஸ் & டெக்ஜிக் தொழில் தலைவர் ராமத்ரேய கிருஷ்ணமூர்த்தி டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “இந்தியாவில் திறன் சார்ந்த வேலைகளுக்கான தேவைகள் அதிகரித்துள்ளன. முக்கியத் துறைகளில் தேவைகள் வலுவாக அதிகரித்து வருகிறது. கடந்த 6 மாதங்களில் பணியமர்த்தும் விகிதம் 16 விழுக்காடு உயர்வைக் கண்டுள்ளது. வரும் மாதங்களிலும் பணியமர்த்தும் விகிதம் வளர்ச்சி காணும்என்றார்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.