போலிச் செய்திகளை தடுக்க வாட்ஸ் அப் - ரிலையன்ஸ் ஜியோ இணைந்து முயற்சி
சமீபத்தில் தான், ஜியோ, தனது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு, இணைய வசதி கொண்ட மலிவு விலை மொபைல்களில் வாட்ஸ் அப் சேவையை அறிமுகம் செய்தது. 2.5 கோடி ஜியோ போன் வாடிக்கையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் முதல் முறையாக இணையத்தை பயன்படுத்துபவர்கள். போலிச் செய்திகள், முறையற்ற வீடியோக்கள், தகவல்கள் பரிமாற்றத்தைக் கட்டுப்படுத்த வாட்ஸ் அப் ஒரு பக்கம் போராடிக் கொண்டிருக்கிறது.
கடந்த வருடம் ரூ.1,500-ஐ திரும்பப்பெறத்தக்க டெபாசிட்டாக பெற்றுக் கொண்டு ஜியோ போன்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரப்பட்டன. இவை இணைய வசதி கொண்டவையென்றால் அப்போது வாட்ஸ் அப் சேவை இதில் முடக்கப்பட்டிருந்தது.
ஃபார்வர்ட் செய்யப்பட்ட தகவலை அடையாளம் கண்டுகொள்வது எப்படி, யோசித்து தகவல்களைப் பகிர்வது எப்படி உள்ளிட்ட பல வழிகாட்டுதல்களுடன் புதிய ஜியோ போன் வாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ் அப் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என வாட்ஸ் அப் செய்தித் தொடர்பாளர் கார்ல் வூக் தெரிவித்துள்ளார்.
சமூக
ஊடகங்களிலும், வாட்ஸ் அப் போன்ற தகவல் பரிமாற்ற செயலிகளிலும், அவதூறான தகவல்கள் பகிரப்பட்டு அதன் மூலம் நடைபெற்ற வன்முறை சம்பவங்களில் 30க்கும் மேற்பட்டோர் இந்த வருடம் இறந்துள்ளதாகத் தெரிகிறது. சிலர் கிராமப்புறங்களில் சிறுபான்மையினர் குறிவைத்து தாக்கப்படுவதாகவும் போலீஸ் தரப்பு முன்னதாகத் தெரிவித்திருந்தது. இந்தக் குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வர, மத்திய அரசு வாட்ஸ் அப் நிறுவனத்தை அணுகியது.
போலிச் செய்திகள் பரவுவதைத் தடுக்க வாட்ஸ் அப் ஏற்கனவே சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தகவல்களை ஒரே நேரத்தில் ஐந்து நபர்களுக்கு மேல் ஃபார்வர்ட் செய்ய முடியாது, அப்படி செய்யப்படும் தகவல்களின் மேல், அது ஃபார்வர்ட் செய்யப்பட்டது என்ற அடையாளம் இருக்கும்.
இந்தியாவில் கிட்டத்தட்ட 20 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ் அப்பில் பணப் பரிமாற்ற சேவையும் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்தியப் பிரிவை நிர்வகிக்க தலைமைப் பொறுப்பில் நியமிக்க ஒருவரையும், கொள்கைப் பிரிவு தலைமைக்கு ஒருவரையும் வாட்ஸ் அப் தேடி வருகிறது. இந்தியப் பயனர்களின் குறைகளை கவனிக்க பிரத்யேகமாக ஒருவரை கலிபோர்னியா தலைமை அலுவலகத்தில் நியமித்துள்ளது.
- ராய்ட்டர்ஸ்
No comments
Post a Comment