ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம்:தேர்தல் நடத்தாததால் அரசு நிதி நிறுத்தம்!
திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சியில் மாதந்தோறும் சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதால் அலுவலர்கள், தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் நகராட்சி 2014 ல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இங்கு 200 க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். மாநகராட்சியில் 170 துப்புரவு தொழிலாளர்கள், 280 ஒப்பந்த தொழிலாளர்கள் என 450 பேர் பணி செய்கின்றனர்.
இவர்களுக்கு மாநகராட்சி ஒவ்வொரு மாதமும் சம்பளம் வழங்குவதில் தாமதம் செய்வதால் ஊழியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.மாதம் முதல் தேதியில் வழங்க வேண்டிய சம்பளம் 15 ம் தேதி கடந்தும் வழங்காததால் அவதிக்குள்ளாகி வருகின்றனர். வீட்டுக் கடன், கல்விக் கடன் பெற்றவர்கள் நிதி நெருக்கடியால் தவிக்கின்றனர்.
No comments
Post a Comment