மாற்றுத்திறன் மாணவர் விவரம் ஆன்லைனில் பதிவு செய்ய பயிற்சி
விவரங்களை ஆன்லைனில் பதிவு செய்வது குறித்து சிறப்பாசிரியர்கள், டேட்டா ஆப்ரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தியா முழுவதும் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ஒரே மாதிரியான ஸ்மார்ட் கார்டு (அடையாள அட்டை) வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களுக்கு பிரத்யேக மென்பொருள், லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை பதிவேற்றம் செய்வது குறித்து மூடநீக்கியல் வல்லுநர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் மூலம் மாற்றுத் திறனாளிகளின் விவரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய சிறப்பாசிரியர்கள், டேட்டா ஆப்ரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. நேற்று முடநீக்கியல் வல்லுநர் பாஸ்கரன் பயற்சி அளித்தார்.
No comments
Post a Comment