தமிழகத்தில் ஒருவர் தான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவரா -ஓர் அலசல் - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 20, 2018

தமிழகத்தில் ஒருவர் தான் நல்லாசிரியர் விருதுக்கு தகுதியானவரா -ஓர் அலசல்

பொதுவாக ஆசிரியர்களுக்கான விருதுகள் பற்றி பல்வேறு விமர்சனங்கள்
இருந்தாலும் ...
 

தேசிய நல்லாசிரியர் அரசு விருது பற்றி சமீபத்தில் குங்குமம் வழிகாட்டி இதழ் ஒரு கருத்து கேட்டு இருந்தது. அதில் எனது கருத்தாக ...

செப்டம்பர் 5 , ஆசிரியர் தினம் ,நம் நாடெங்கிலும் வாழ்த்துகளும் விழாக்களும் கொண்டாட்டங்களும் மிகுந்திருக்க , தேசிய நல்லாசிரியர் விருது பற்றிய சில கருத்துகளும் விவாதங்களுக்கு உள்ளாகி வருகின்றது.

எல்லா வருடங்களும் 4 , 5 எனவும் , சில வருடங்கள் 6 விருதுகள் கூட தமிழ்நாட்டுக்குத் தரப்படும் நிலையில் இந்த வருடம் ஒரே ஒரு விருது மட்டும் வழங்கியது ஏன் ?

விருது பெற்றவர் பற்றி பிரதமர் பாராட்டுகளையும் ஊடக செய்திகளையும் பார்த்தால் , நம் தமிழக ஆசிரியர்களின் செயல்பாடுகளோடு
மற்ற மாநிலங்களின் விருது பெற்ற ஆசிரியர்செயல்பாடுகளை ஒப்பிட்டால் , தமிழக ஆசிரியர்களை விட எந்த விதத்திலும் அதிகமானதாகச் செய்தததாகத் தோன்றவில்லை .

சமுதாய மாற்றத்திற்கு வழிவகுக்கும் ஆசிரியர்களுக்காகவே தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுவது உண்மையானால் , தமிழகம் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு உள்ளது என்பதே சரி .

டிஜிட்டல் இந்தியாவாக அறிவித்து இருந்தார் பிரதமர் , தமழக அரசுப் பள்ளிகளில் நூற்றுக் கணக்கான ஆசிரியர்கள் தங்கள் பள்ளிகளில் இதை செயல்படுத்தி வருகின்றனர்.

தூய்மை இந்தியா திட்டம் அறிவிக்கும் முன்னரே தங்கள் பள்ளி ,கிராமங்களைத் தூய்மையாகவே வைத்து பெருமை படுத்தியோர் ஏராளம் நம் தமிழகத்திலே .

இதே போல ஒவ்வொரு பிரிவிலும் சில நூற்றுக் கணக்கான ஆசிரியர்களை நம் தமிழகத்தில் அடையாளம் காணலாம் .

இடைநிற்றல் ஏற்படாமலிருக்க பல ஆசிரியர்கள் பல்வேறு முறைகளைக் கையாண்டு தொடக்கப் பள்ளியில் கூட 600க்கும் மேற்பட்ட மாணவர் படித்து வரும் பல பள்ளிகள் தமிழகத்தில் செயல்பட்டு வருகின்றன.

சமூகத்துடன் இணங்கி, பள்ளி மேலாண்மைக் குழுக்கள் வழியே பள்ளிகளை வழி நடத்தி கல்வி உரிமைச் சட்டத்தை நிறைவேற்றி வரும் பள்ளிகள் சில நூறு.

மக்களின் பாராட்டைப் பெற்று கல்விச் சீர் பெற்று வளப்படுத்தி வரும் ஆசிரியர்கள் பல நூறு பேர்.

வகுப்பறையில் நூலகம் அமைத்து மேம்படுத்தி மாணவர் சிந்தனையை நெறியாக்கி வாழும் ஆசிரியர் பல நூறு பேர் .

விளையாட்டுத் துறையில் சாதிக்கும் மாணவரை உருவாக்கி வரும் ஆசிரியர் பல நூறு பேர் .

அறிவியல் கண்டுபிடிப்புகளில் இந்திய அளவில் சாதிக்கும் மாணவரை உருவாக்கும் ஆசிரியர் பல நூறு பேர் .

பசுமை இந்தியாவை உருவாக்க கற்பித்தலோடு இணைத்து மாற்றம் படைத்து வரும் ஆசிரியர்கள் பல நூறு பேர் .

வகுப்பறை கற்பித்தல் செயல்பாடுகளில் , மொழிக் கற்பித்தல் , கணக்குக் கற்பித்தல் , அறிவியல் கற்பித்தலில் புதுமை , பெண் கல்விக்கு முக்கியத்துவம் தந்து சமுதாய மாற்றத்தை ஏற்படுத்தி வரும் பல நூறு ஆசிரியர்கள் தமிழகத்தில் உண்டு.

இன்னும் சொல்லப் போனால் ,சமூக மாற்றத்தைத் தர கல்வியே வழி என்ற நோக்கத்தில், பள்ளிகளில் கற்பித்தல் பணி செய்து கொண்டே ... தனிப்பட்ட முறையில் ஆசிரியர் அமைப்புகளை ஏற்படுத்தி , கல்விக்கான அமைப்புகளையும் ஏற்படுத்தி போராடி மாற்றங்கள் ஏற்படுத்தி வரும் தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்கள் ஏராளம்.

மேற்கூறியவர்களுள் சரியான மதிப்பீட்பைத் தந்து
ஏன் இவர்களை எல்லாம் மாநில அரசு மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்ய வில்லையா அல்லது பரிந்துரை செய்து மத்திய அரசு நிராகரிப்பு செய்ததா ?

சில கல்வியாளர்களிடம் இது பற்றி பேசுகையில் , இந்த ஆண்டு மாநில அரசு தேர்வு செய்து பரிந்துரைத்ததவர்களுக்கு டெல்லியில் ஒரு நேர்காணல் வைத்ததே இந்தப் புறக்கணிப்புக்கு மிக முக்கிய காரணம் என்கின்றனர்.

எது எப்படியோ தமிழக ஆசிரியர்கள் திட்டமிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டு இருப்பதும் திட்டமிட்ட கல்வி அரசியல்.


உமா





No comments: