Header Ads

Header ADS

காமலை நோய் வந்தால் சரிசெய்ய இந்த குறிப்பை பயன்படுத்துங்கள்...


என்னதான் வைட்டமின் மருந்து மாத்திரைகளை சாப்பிட்டாலும் இயற்கை குணம் வாய்ந்த பழங்களுக்கு நிகரானது எதுவும் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த வகையில் உலர் திராட்சையில் உடலுக்கு வலிமை
தரும் சத்துக்கள் நிறைய உள்ளன.
 
இதில் உள்ள வைட்டமின் மற்றும் அமினோ அமிலங்கள் நிறைய சக்தியை தருகின்றன. விளையாட்டு வீரர்களுக்கு போட்டியின் நடுவே ஊக்கம் 
தரக்கூடிய கூடிய பழ வகைகளில் மிகவும் முக்கியமானது இந்த உலர் திராட்சை. இதில் உள்ள தாமிரசத்து ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

காமலை நோயுள்ளவர்கள் தினமும் இரண்டு வேளை இந்த பழத்தை சாப்பிட்டால் நிவாரணம் கிடைக்கும்.

தொண்டைக்கட்டு பிரச்னை உள்ளவர்கள் இரவு தூங்கும் முன் 20 உலர் திராட்சை பழங்களை சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு காய்ச்சி 10 வால்மிளகை தூள் செய்து பனங்கற்கண்டு சேர்த்து குடித்தால் தொண்டைக்கட்டு சென்ற தடம் தெரியாது.

நோயுள்ளவர்கள் தினமும் உணவுக்கு பின்னர் காலை மற்றும் மாலையில் 25 உலர் திராட்சை பழங்களை தொடர்ந்து 7 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பூரணமாக குணம் பெறலாம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.