Header Ads

Header ADS

எமிஸ்' பதிவேற்றப்பணிகளை ஆசிரியர் பயிற்றுநர்களிடம் ஒப்படைக்க கோரிக்கை:


*'கற்பித்தல் பணிகளில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க 'எமிஸ்' திட்ட விபரங்களை இணையத்தில் பதிவேற்ற வட்டார வள மைய ஆசிரியர்களை பயன்படுத்தலாம்,' என, கல்வித்துறைக்கு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.*

*மாநில கல்வி மேலாண்மை தகவல் முறைமையின் (EMIS) கீழ், மாவட்டங்களில் இணையத்தில் பள்ளி மாணவர்களின் முழு விபரங்கள் பதிவேற்றம் செய்யும் பணிகள் நடந்தன. ஆக.,31 மாலை 5:00 மணிக்குள் அனைத்து பள்ளி ஆசிரியர்களும் விவரங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டனர்.*

 *அதனால் மாநிலத்தில் உள்ள 45,632 பள்ளிகளில் உள்ள 60 ஆயிரத்து 202 ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் பதிவேற்றம் செய்தனர். இன்டர்நெட் 'சர்வர்' பாதிப்படைந்தது.*

*மேலும் ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகள் பாதிப்படைந்தன.*

 *இதனால் மாவட்டங்களில் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர்களிடம் பதிவேற்ற பணிகளை வழங்கலாம் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கல்வித்துறைக்கு கோரிக்கை விடுத்து கடிதம் அனுப்பியுள்ளது.*

*தேனி மாவட்டச் செயலாளர் சந்திரன் கூறியதாவது: காலாண்டு தேர்வு நெருங்கிக் கொண்டு இருக்கிறது. 'எமிஸ்' பதிவேற்ற பணிகளை, வட்டார வள மையங்களில் உள்ள ஆசிரியர் பயிற்றுநர்களிடம் வழங்கினால், ஆசிரியர்களின் கற்பித்தல் பணிகள் பாதிக்காது. இதனை அரசு ஆலோசிக்கவேண்டும், என்றார்.*

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.