Header Ads

Header ADS

நீட்' பயிற்சிக்கு வராமல், 'டிமிக்கி' : ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை நீட்' தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும்,


நீட்' பயிற்சிக்கு வராமல், 'டிமிக்கி' : ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை
நீட்' தேர்வு பயிற்சிக்கு வராமல் டிமிக்கி கொடுக்கும்அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது
 

*பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர வேண்டும் எனில், நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்

*இந்த தேர்வில், சி.பி.எஸ்.., பாடத்திட்டப்படி, வினாக்கள் இடம் பெறுவதால், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற திணறுகின்றனர்
 
*சவால்

*அதிலும், அரசு பள்ளி மாணவர்கள், நீட் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேருவது பெரும் சவாலாக உள்ளது


*இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களும், நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, மருத்துவ படிப்பில் சேரும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், இலவச பயிற்சி நடத்தப்படுகிறது. 2017 - 18ல், சிறப்பு பயிற்சி துவங்கியது


*இந்த பயிற்சி பெற்றதில், 20க்கும் குறைவான மாணவர்களே, மருத்துவ படிப்பில் சேர முடிந்து உள்ளது


*இதையடுத்து, இந்த ஆண்டு, நீட் பயிற்சியை, கல்வி ஆண்டின் துவக்கத்திலேயே நடத்த, பள்ளி கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது


*இதற்காக, மாவட்ட வாரியாக, 120 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு, நீட் கற்றல் பயிற்சி தரப்படுகிறது


*ஆனால், பெரும்பாலான மாவட்டங்களின், அரசு பள்ளி ஆசிரியர்கள், நீட் கற்றல் பயிற்சி பெற வராமல், டிமிக்கி கொடுத்து வருகின்றனர்


*இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி...,க்கள், பள்ளி கல்வி உயர் அதிகாரி களுக்கு புகார் அளித்து உள்ளனர்


சஸ்பெண்ட்


*எனவே, முதல் கட்டமாக, நீட் பயிற்சிக்கு வராத ஆசிரியர்களுக்கு, விளக்கம் கேட்டு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது


*விளக்கம் திருப்தியாக இல்லாவிட்டால், டிமிக்கி ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், 'சஸ்பெண்ட்' செய்யவும், சி...,க்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது
 

புதிய ஆசிரியர்கள்?


*நீட்' பயிற்சியை புறக்கணிப்பது குறித்து, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர், கே.பி..சுரேஷ் கூறியதாவது


*புதிய பாடத்திட்டம் மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, புதிய முறையில் பொது தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, மாணவர்களுக்கு கூடுதல் நேரம் வகுப்பு எடுத்து, பொது தேர்வுக்கு பயிற்சி தர வேண்டியுள்ளது
 
*இந்த நேரத்தில், நீட் பயிற்சியில், ஆசிரியர்களால் பங்கேற்க முடியாது. தேவைப்பட்டால், நீட் பயிற்சிக்கு புதிய ஆசிரியர்களை, அரசு நியமிக்கட்டும்.இவ்வாறு அவர் கூறினார்

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.