‘பேடிஎம்’க்கு வந்த புதிய சோதனை!
பணப்பரிவர்த்தனை சேவைகளை வழங்கிவரும் பேடிஎம் நிறுவனத்துக்குத்
தற்போது புதிய சோதனை உருவாகும் நிலை உண்டாகியுள்ளது.
இந்தியாவில் டாக்ஸி சேவையில் முக்கிய நிறுவனங்களுள் ஒன்றாகத் திகழும் ஊபர் தற்போது பணப் பரிவர்த்தனைகளுக்காக பேடிஎம், ஜியோ மணி, கிப்ட் கார்டுகள், கிரெடிட் / டெபிட் கார்டுகள், UPI உள்ளிட்ட சேவைகளைப் பயன்படுத்தி வருகிறது. இந்த நிலையில் தற்போது இதில் புதிதாக கூகுள் நிறுவனத்தின் ‘கூகுள் பே’ சேவையும் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய வாடிக்கையாளர்களைக் கவர அறிமுகச் சலுகையையும் கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து கூகுள் வெளியிட்டுள்ள பதிவில், “கூகுள் பே சேவையைப் பயன்படுத்தி 10 ஊபர் சவாரிகளைச் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1,000 மதிப்பிலான பரிசுத் தொகை காத்திருக்கிறது” என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கூகுளின் இந்த அறிவிப்பால் தற்போது ஊபரில் பேடிஎம் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் கூகுள் பேவுக்கு மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
‘கூகுள் டெஸ்’ என்ற பெயரில் இயங்கிவந்த சேவையைச் சமீபத்தில் கூகுள் நிறுவனம் ‘கூகுள் பே’ என்று பெயர் மாற்றம் செய்திருந்தது. பெயர் மாற்றத்தைத் தவிர அதில் பெரிய மாற்றங்கள் ஒன்றும் நிகழவில்லை. தற்போது கூகுள், HDFC, ICICI, கோடாக் மஹிந்திரா, ஃபெடரல் உள்ளிட்ட வங்கிகளுடன் இணைந்து இந்தியப் பயனர்களுக்கு உடனடி கடன் வழங்கும் செயலியை தொடங்கத் திட்டமிட்டு வருகிறது.
No comments
Post a Comment