அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிப்பு - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, September 9, 2018

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிப்பு


இந்திய ரூபாய் மதிப்பு சரிவால், வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய்  மதிப்பு கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. இது பொருளாதாரத்திலும், அனைத்து தரப்பினருக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவால் அமெரிக்கா மற்றும்  ஐரோப்பிய நாடுகளில் படிக்கும் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது, ரூபாய் மதிப்பு  71 யை எட்டியுள்ள நிலையில், இது மாணவர்கள் மத்தியிலும்,  அவர்களின்  பெற்றோர்கள் மத்தியிலும் அதிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது, எங்களின் அன்றாட மற்றும் படிப்பு செலவுகளுக்கு அதிகளவில் பணம் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டாலருக்கு  நிகரான ரூபாயின் மதிப்பு முன்னேற்றம் அடையும் வழிமுறைகள் எதுவும் தெரியவில்லை என்று வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.


ரூபாய்

ரூபாயின் மதிப்பு குறைவால்,கடந்த ஆறு மாதங்களில், இங்கு தங்கியிருப்பதற்கான செலவுகள்,கல்வி கட்டணம் உயர்ந்துள்ளதாக  கூறப்படுகிறது. அமெரிக்காவில் படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் தங்கி படிக்கும் இடத்தை பொருத்து மாதத்திற்கு சராசரியாக  500- 800 டாலர் வரையில் செலவாகிறது. அமெரிக்காவில் கலிபோர்னியா மற்றும் நியூயார்க் நகரங்களில்  தங்கியிருப்பதற்கான செலவுகள் அதிகமாக இருக்கிறது. அதேசமயம், டெக்ஸாஸ் நகரில் செலவுகள் மிகவும் குறைவு. இங்குதான் இந்திய மாணவர்கள் அதிகளவில் படிக்கின்றனர்.
 

அதேசமயம், ரூபாய் மதிப்பு சரிவால் ஆஸ்திரேலியா மற்றும் கனடா  ஆகிய நாடுகளில் படிக்கும் மாணவர்கள் அதிகளவில் பாதிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.  இங்கிருந்து வெளிநாடுகளில் 3.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 1 லட்சம் மாணவர்கள் பயில்கின்றனர்.வங்கியில் கல்விக்கடன் மூலமாக படிக்கும் மாணவர்கள் தற்போது டியூசன் பீஸ் உயர்வால் கடுமையாக அவதிக்குள்ளாகியுள்ளனர்.


ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்து பொருளாதார ஆலோசகர் கெளரி ராமகிருஷ்ணன் கூறுகையில்,
’’ அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு கடந்த சில நாட்களாக சரி்ந்து கொண்டே வருகிறது. இது அனைத்து தரப்பு மக்களையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதன் காரணமாக  பெட்ரோ்ல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகரித்துள்ளது. பெட்ரோல்,  டீசல் விலை உயர்வால் அத்தியாவாசிய பொருள்களின் விலை உயர்ந்துள்ளது. மேலும்,  வீடுகளுக்கு பயன்படும் பொருள்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக நிறுவனங்கள் கூறுகின்றன. இதனால், பெீாதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுதவிர, ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் இறக்குமதியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்

No comments: