பக்கவாதம் வந்தவர்களை நடக்கவைக்கும் இம்ப்ளேன்ட் கருவி!
பக்கவாதம் வந்தவர்களை நடக்கவைக்கும் சோதனை முயற்சியில் வெற்றி கண்டுள்ளனர் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பல்கலைக்கழகத்தைச்
சேர்ந்த மருத்துவர்கள் குழு. எலெக்ட்ரிக்கல் இம்ப்ளேன்ட் (Electrical Implant) எனப்படும் இந்த சிகிச்சை முறை மூலம், ஸ்பெஷல் வாக்கர் (Walker) ஒன்றின் உதவியோடு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்கமுடியாமல் முடங்கிய நோயாளிகள் நடக்கின்றனர்.கடந்த ஐந்து வருடங்களாகப் பக்கவாதத்தில் இருந்த மூன்று பேருக்கு மட்டும் செய்யப்பட்ட சோதனை முயற்சியில், மூவருமே மீண்டும் நடக்கத் தொடங்கியுள்ளனர்.
விபத்து காரணமாக செயலிழந்த முதுகுத்தண்டுவடத்தின் மீது, அறுவைசிகிச்சை மூலம் ஸ்டிமுலேட்டர் (Stimulator) பொறுத்தப்படும்.
No comments
Post a Comment