Header Ads

Header ADS

ஐந்தே நாட்களில் உடல் எடையைக் குறைக்க உதவும் அற்புத ஜூஸ்!!!


பார்ஸ்லியில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக இருப்பதோடு,
வைட்டமின் சி, கே மற்றும் போன்றவையும் ஏராளமாக நிறைந்துள்ளது.

பார்ஸ்லியை கொண்டு தயாரிக்கப்படும் ஜூஸை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு, உடலுக்கு வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை சீராக கிடைத்து, உடல் எடையும் குறையும்.
 
மேலும் உடல் எடையை குறைக்க உதவும் பார்ஸ்லி ஜூஸை எப்படி செய்வது என்றும், அதனால் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் பார்ப்போம்.
 
தேவையானவை

பார்ஸ்லி- 1 கட்டு
எலுமிச்சை- 1
தண்ணீர்- 1 கப்

செய்முறை

முதலில் பார்ஸ்லியை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து, வடிகட்டி அந்த சாற்றில் எலுமிச்சையை பிழிந்து, 1 கப் தண்ணீர் ஊற்றி தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
ஆனால் வெறும் 5 நாட்கள் மட்டும் குடிக்க வேண்டும். பின் 10 நாட்கள் இடைவெளி விட்டு, மீண்டும் 5 நாட்கள் குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உடல் எடை குறைவதை நன்கு காணலாம்.
புற்றுநோயைத் தடுக்கும் பார்ஸ்லியை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது உடலில் புற்றுநோயை உண்டாக்கும் கட்டிகளின் வளர்ச்சியைக் குறைக்கும்.
நன்மைகள்

இந்த ஜூஸை தினமும் குடித்து வருவதினால் உடலில் உள்ள டாக்ஸின்கள் அனைத்தையும் வெளியேற்றி அழற்சி ஏற்படுவதைக் குறைக்கும்.
மேலும் இந்த பானம் உடலுக்கு வேண்டிய சத்துக்களை வழங்கும். உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். செரிமானம் சீராகும். முக்கியமாக உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
இதில் உள்ள நேயெதிர்ப்பு அழற்சி தன்மையினால், ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், இதனை உணவில் சேர்த்து வந்தால், அதிலிருந்து விடுபடலாம்.
சிறுநீர் பாதையில் உள்ள தொற்றுக்களை நீக்க வேண்டுமானால், பார்ஸ்லியை உணவில் சேர்ப்பது நல்லது.
குறிப்பு

கர்ப்பிணிகள் பார்ஸ்லியை உணவில் அதிகம் சேர்க்கக்கூடாது. ஏனெனில் அது மாதவிடாயைத் தூண்டி, கருவை கலைத்துவிடும்.
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், பார்ஸ்லியை தவிர்ப்பது நல்லது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.