மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர் !!
நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், மாணவர் எண்ணிக்கை குறைவான பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், கல்வியாண்டுதோறும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பள்ளி மற்றும் பராமரிப்பு மானியத்தொகை வழங்கப்படுகிறது.
துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு, 15 ஆயிரம் ரூபாய் வரையிலும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு, 17ஆயிரம் ரூபாயும் வழங்கப்படுகிறது.
இத்தொகையில், கரும்பலகைகளுக்கு வண்ணம் பூசுதல், குடிநீர் தொட்டி பராமரிப்பு, உள்ளிட்ட சிறிய மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
நடப்பாண்டில், அனைவருக்கும் கல்வி இயக்ககம், 'ஒருங்கிணைந்த கல்வி திட்டம்' (சமக்கிரஹ சிக்க்ஷா அபியான்) என மாற்றப்பட்டுள்ளது. திட்டங்களின் மூலம் பள்ளிகளுக்கான நிதிஒதுக்கீடுகளிலும் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
திட்டத்தின்படி, 15 முதல் 100 மாணவர்கள் உள்ள பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய், 101 முதல் 250 மாணவர் கொண்ட பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய், 251-1,000 வரை உள்ள பள்ளிக்கு 75 ஆயிரம் ரூபாய், 1,000 மாணவர்களுக்கு மேல் உள்ள பள்ளிகளுக்கு ஒரு லட்சம் ரூபாயாகவும் அறிவிக்கப்பட்டது. மானியத்தொகை வழங்கப்படும் பள்ளிகளின் பட்டியல்
வழங்கப்பட்டுள்ளது.
உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கான நிதிஒதுக்கீடு பட்டியலில் இல்லை. 15க்கும் குறைவான மாணவர் எண்ணிக்கை கொண்ட பள்ளிகள் நிலை தெரியவில்லை.
இதனால், மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
No comments
Post a Comment