பிளாஸ்டிக் கோப்புகள் பயன்பாட்டிற்கு தடை
பூர்வாங்க பணிகளை கவனிக்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இக்குழுவினர், பல்வேறு துறைகளிடமிருந்தும், பிளாஸ்டிக் தடைக்கான ஆலோசனைகளை பெற்று வருகின்றனர்.இந்நிலையில், அரசு அலுவலகங்களில், அட்டை கோப்புகள் பிரதானமாக இருந்தாலும், பல நேரங்களில், பிளாஸ்டிக்கால் தயாரிக்கப்பட்ட கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், பிளாஸ்டிக் கோப்புகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என, வனத்துறை அதிகாரிகள், அரசுக்கு ஆலோசனை தெரிவித்து இருந்தனர். சமீபத்தில், தலைமை செயலர் தலைமையில் நடந்த, அனைத்து துறை உயர் அதிகாரிகள் கூட்டத்தில், இக்கருத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.இதை தொடர்ந்து, முதற்கட்டமாக, தலைமை செயலகத்தில் உள்ள துறை அலுவலகங்களில், பிளாஸ்டிக் கோப்புகளை பயன்படுத்த, அரசு தடை விதித்துள்ளது. இதற்கு மாற்றாக, அட்டையால் தயாரிக்கப்படும் கோப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என, அனைத்து துறை, தலைமை அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது
No comments
Post a Comment