காதுவலி சரியாக சிறந்த இயற்கை மருத்துவம் ! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Monday, September 10, 2018

காதுவலி சரியாக சிறந்த இயற்கை மருத்துவம் !


காது வலி என்பது நம்மால் தாங்கி கொள்ள முடியாத வலிகளில் ஒன்று. காது வலி சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் வர கூடிய ஒன்று தான். ஆனால் குழந்தைகளுக்கு காது வலி வந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. திடீரென காதுவலி வந்து விட்டால் அந்த நேரத்தில் உடனே மருத்துவரை அணுகுவது கடினம் தான். அதற்க்கு தான் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே காது வலிக்கு சிறந்த நிவாரணம் தர கூடிய வழிகளை கூறியுள்ளனர். அதனை பற்றி அறிந்துக் கொள்ள தொடர்ந்துப் படியுங்கள் .
இயற்கை மருத்துவம்:
நம்முடைய உடலுக்கு இயற்கை மருத்துவம் தான் சிறந்த நிவாரணம் தரும் என்பது நம் எல்லாருக்கும் தெரியும். நம்முடைய முன்னோர்கள் வீட்டில் இருந்தபடியே அனைத்து வியாதிகளுக்கும் நிவாரணத்தை கண்டு பிடித்துள்ளனர். அத்தகைய வீட்டு வைத்தியத்தால் நமக்கு எந்த ஒரு பக்க விளைவும் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் நாம் கடைகளில் விற்கும் மருந்து பொருட்களை பயன்படுத்துவதால் தற்காலிக நிவாரணம் கிடைக்குமே தவிர நிரந்தரமான நிவாரணம் கிடைக்காது. மேலும் பக்க விளைவுகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே நாம் இயற்கை முறை மருத்துவத்தை பின்பற்றுவது நல்லது.

தேங்காய் எண்ணெய்:

காதுவலி வந்து விட்டால் உடனே மருத்துவரை அணுக முடியாத நேரத்தில் நாம் வீட்டில் உள்ள பொருட்களை கொண்டே சரி செய்யலாம். இதற்க்கு தேங்காய் எண்ணெயை சூடாக்கி அதில் சிறிதளவு உப்பு சேர்த்து கொள்ள வேண்டும். பின் மிதமான சூட்டில் அந்த எண்ணெயை காதில் ஊற்ற வேண்டும். இவ்வாறு செய்தால் காது வலி நீங்கும்.
 
தூதுவளை:

இது அனைவருக்கும் தெரிந்த ஒரு முறை தான். தூதுவளையை நீரில் போட்டு காய்ச்சி கொள்ள வேண்டும். பின் அந்த நீரை காலை மாலை என குடித்து வந்தால் நமக்கு காது வலி பிரச்சனையில் இருந்து நிவாரணம் பெறலாம். இதனை தொடர்ந்து குடித்து வந்தால் ணமாக்கு காது வலி மற்றும் தலை வலி பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

மருதாணி:

நம்முடைய வீட்டில் இருக்க வேண்டிய முக்கியமான செடிகளில் ஒன்று தான் மருதாணி செடி. மருதாணியில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் உள்ளது. இதனால் தான் நம்முடைய முன்னோர்கள் வீட்டில் இந்த மருதாணி செடியை வளர்த்து வந்தனர். இது காது வலிக்கு ஒரு சிறந்த நிவாரணமாக இருக்கும். மருதாணி வேரை நன்றாக நசுக்கி அதன் நீரை காதில் விட்டால் காது வலி நீங்கும்.
 
தாழம்பூ:
இது நம்முடைய காது வலி மற்றும் காதில் ஏற்படும் கட்டிகளை குண படுத்த ஒரு சிறந்த நிவாரண பொருளாகும்.இதனை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம். தாழம்பூவை நெருப்பு தணலில் சூடு படுத்த வேண்டும். பின் அதனை கசக்கி சாரி பிழிந்து எடுத்து கொள்ள வேண்டும். இந்த சாறை காதில் சிறிது சிறிதாக விடுவதால் நம்முடைய காதுவலி நீங்கும். மேலும் காதில் ஏற்படும் கட்டிகளை குறைக்கவும் உதவும்.
 
நல்லெண்ணெய்:
சிறிதளவு நல்லெண்ணெயை எடுத்து கொண்டு அதில் ஒரு கிராம்பை போட்டு சூடு படுத்த வேண்டும். பின் மிதமான சூட்டில் காதில் விட்டால் காது வலி விரைவில் குணமாகும்.

No comments: