Header Ads

Header ADS

வாட்ஸ் அப் நம்பரை சேமக்காமல் அவர்களுக்கு வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி..!


இப்பொழுதெல்லாம் வாட்ஸ்அப் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள் அந்த வகையில் நாம் யாராவது ஒருவருக்கு வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் முதலில்
அவர்களின் நம்பரை சேமிக்க வேண்டியதாக இருக்கிறது,அதன் பிறகு தான் மேசேஜ் அனுப்ப முடிகிறது ஆனால் நாம் அனைவரின் நம்பரையும் சேவ் செய்ய விரும்புவதில்லை
 
உதாரணத்துக்கு நீங்கள் இப்பொழுது ஏதாவது ஷாப்பிங் அல்லது ஏதாவது டாக்யூமென்ட் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பர அடிக்கடி தேவை படுவதில்லை அந்த வகையான நம்பரை நாம் சேவ் செய்ய விரும்புவதும் இல்லை இருந்தாலும் அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும் என்றால் அவர்களின் நம்பரை சேமித்த பிறகு தான் மெசேஜ் அனுப்ப முடியும் ஆனால் நாம் இப்பொழுது அத்தகைய நம்பரை சேவ் செய்யாமல் எப்படி மெசேஜ் அனுப்புவது என்பதை பற்றி தன் பார்க்க போகிறோம்.

சரி. நாம் மெசேஜ் அனுப்ப உள்ள நபரின் எண் வாட்ஸ் அப்பில் இருந்து, அந்த நம்பரை சேமிக்காமலே மெசேஜ் எப்படி அனுப்புவது?


1 உங்கள் மொபைலில் க்ரோம், அல்லது ஏதேனும் வெப் ப்ரவுசரை திறக்கவும்.


2 https://api.WhatsApp.com/send?நம்பர் மேற்காணும் முகவரியை இட்டு என்டர் நம்பர் என்று இருக்கும் இடத்தில் யாருக்கு அனுப்ப நினைக்கிறீர்களோ அவரது நம்பரை டைப் செய்யவும். உதாரணத்திற்கு எண் +91-9990012345 என்றிருந்தால் 919990012345 என்று டைப் செய்யவும்

3 இப்போது எண்டர் அழுத்தவும்


4 ஸ்க்ரீனில் Message என்று பச்சை நிற பட்டன் இருக்கும் . அதை அழுத்தவும்.


5 தானாக வாட்ஸ் அப் திறந்து அந்த நம்பருக்கு மெசேஜ் அனுப்பும் பக்கத்திற்கு செல்லும்.

6 https://wa.me/WhatsAppNumber இந்த லிங்கையும் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பலாம்.


7 WhatsAppNumber என்பதற்கு பதில் நம்பர் டைப் செய்து மெசேஜ் அனுப்பலாம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.