மீம்ஸ்களை சேகரித்து வைத்தால் வங்கி கணக்கில் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்; எங்கு தெரியுமா? - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Thursday, September 20, 2018

மீம்ஸ்களை சேகரித்து வைத்தால் வங்கி கணக்கில் இருந்து அபராதம் வசூலிக்கப்படும்; எங்கு தெரியுமா?


சமீப காலமாக வலைதளங்களில் மிகப்பிரபலமாக இருப்பது மீம்ஸ் தான்

பொதுவாக இந்த மீம்ஸ் எல்லாமே யாரையாவது கேலி செய்யும் விதமாக தான் உருவாக்கப்பட்டிருக்கும். மக்கள் ஒவ்வொரு கால கட்டத்திலும் தங்கள்
மனதில் இருக்கும் உணர்வுகளை வெளிப்படுத்திட ஒவ்வொரு புதிய முறைகளை கையாளுவர். கார்ட்டூன்,கிரஃபிடி போன்றவை அந்த வகையை சேர்ந்தவை தான்.

தற்போது இருக்கும் டிஜிட்டல் உலகில் மீம்ஸ் அந்த இடத்தினை பிடித்திருக்கிறது.ஏதாவது ஒரு செயலையோ அல்லது நபரையோ, விமர்சிக்க அல்லது கேலி செய்ய உருவாக்கப்படும் இந்த மீம்ஸ்களில் மிகப்பெரிய உள்ளர்த்தங்களும் உளவியல் காரணிகளும் இருக்கின்றன. என்னதான் கேலியாக இந்த மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டாலும் அதில் பல உள்ளர்த்தங்களும் பொதிந்து இருக்கின்றன.இதனாலேயே சமீபகாலமாக இந்த மீம்ஸ்களை எல்லாம் ஆராய்ச்சி செய்ய துவங்கி இருக்கின்றன பல நாட்டு அரசாங்கங்கள்.


ஒருவரை குறித்து உருவாகும் மீம்ஸ்களையும் அந்த மீம்ஸ்க்கும் கிடைக்கும் வரவேற்பையும் வைத்தே மக்கள் மனதை கணிக்கும் இது மாதிரியான ஆய்வுகளில் பல வியத்தகு ஆய்வு முடிவுகள் கிடைத்திருக்கின்றன.
அதனாலேயோ என்னவோ ரஷ்யாவில் இது போன்ற மீம்ஸ்களை சேமித்து வைக்க தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

அதிலும் மதத்தினை கேலி செய்வது போல வரக்கூடிய மீம்ஸ்களை யாராவது சேமித்து வைத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவரது வங்கி கணக்கில் இருந்து அபராதம் வசூலிக்கப்படும் என்றும் ரஷ்ய அரசாங்கம் எச்சரித்திருக்கிறது.அது மட்டுமல்லாமல் இது போன்ற மீம்ஸ்களை சேமிக்கும் நபர்களை கண்காணிக்கவும் துவங்கி இருக்கிறதாம் ரஷ்ய அரசாங்கம்

No comments: