Header Ads

Header ADS

விஜயதசமியன்று, 'அட்மிஷன்': அரசு பள்ளிகளுக்கு உத்தரவு








விஜயதசமி நாளில், புதிய மாணவர்களை சேர்க்க சிறப்பு முகாம் நடத்தும்படி, அரசு பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை பெரும் சரிவை சந்தித்துள்ளது

மாணவர் எண்ணிக்கையை உயர்த்தாவிட்டால், மத்திய அரசின் நிதியுதவி கிடைக்காது என, தமிழக பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. எனவே, மாணவர் சேர்க்கையை உயர்த்துவதற்கு, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

இதுதொடர்பாக, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர் கருப்பசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை உயர்த்த, பள்ளிகளை சுற்றியுள்ள பகுதிகளில், பள்ளிக்கு செல்லாத மாணவர்களை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்க்க வேண்டும்.

விஜயதசமி நாளான, அக்., 19ல், சிறப்பு மாணவர் சேர்க்கை நடத்தி, புதிய மாணவர்களை சேர்க்க வேண்டும்.இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.