பேசிக், ரெகுலர், டிஜிட்டல்... தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் எது சிறந்தது?!
கே.எஸ்.தியாகராஜன்
தபால் நிலைய சேமிப்பு வங்கியில் மூன்று விதமான சேமிப்பு கணக்குகள்
இருக்கின்றன. இதில் மிகச்சிறந்த திட்டம் என்பதை தெரிந்து கொள்வோம்
பேசிக், ரெகுலர், டிஜிட்டல்... தபால் நிலைய சேமிப்புக் கணக்குகளில் எது சிறந்தது?!
நாட்டில் உள்ள அனைவரும் வங்கிச்சேவையைப் பெறவேண்டும் என்பதற்காக பிரதமர் மோடி `ஜன்தன்' வங்கிக்கணக்குகளை அறிமுகம்செய்தார். இதைத் தொடர்ந்து கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கும் வங்கிச் சேவையின்
பலன்களை அடைய வேண்டும் என்பதற்காக Indian Postal Payment Bank (IPPB) தொடங்கத் திட்டமிடப்பட்டது.
நீண்டகாலம் நிலுவையில் இருந்த இந்தத் திட்டம், தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது.
தபால்நிலையத்தில் சேமிப்பு வங்கிச் சேமிப்புத் திட்டம் (IPPB) இந்த மாதம் முதல் செயல்பட தொடங்கியுள்ளது. இதில் மூன்றுவிதமான சேமிப்புக் கணக்குகள் இருக்கின்றன. இவற்றுக்கு 4 சதவிகித வட்டி, குறைந்தபட்ச இருப்புத்தொகை வரம்பு இல்லாமை போன்ற ஒருமித்தப் பயன்பாடுகள் உள்ளன. இந்தச் சேமிப்பு கணக்குகளில் 1 லட்சம் ரூபாய்க்குமேல் சேமிக்க இயலாது. அதேசமயம் பணம் எடுப்பதற்கோ, பணம் போடுவதற்கோ எந்தவித கட்டுப்பாடும் இல்லை.
வங்கி
தபால்நிலையச் சேமிப்பு வங்கியில் (IPPB) ஜாயின்ட் அக்கவுன்ட் தொடங்க இயலாது. மூன்று விதமான சேமிப்பு வங்கிக் கணக்குக்கும், காசோலைப் புத்தகம் (Cheque Book) வழங்கப்படுவதில்லை. கியூ. ஆர் கார்டு (ஏ.டி.எம் கார்டு) வழங்கப்படுகிறது. தபால்நிலைய சேமிப்பு வங்கிக்கணக்கை
(IPPB) மொபைல் ஆப் மூலமாகவோ, தபால்நிலையத்திலோ தொடங்கலாம். அந்த மூன்று வகையான சேமிப்புக் கணக்குகள் குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்வோம்.
டிஜிட்டல் சேமிப்புக்கணக்கு ( Digital bank account)
தபால்நிலையத்துக்குச் சென்று காத்திருந்து சேமிப்புக் கணக்கு தொடங்க முடியாதவர்கள், IPPB மொபைல் ஆப்பை டவுண்லோடு செய்து டிஜிட்டல் சேமிப்புக் கணக்கை உடனடியாகத் தொடங்கலாம். இந்தச் சேமிப்புக் கணக்கைத் தொடங்க முதலில் பான்கார்டு
எண், ஆதார் எண் ஆகியவற்றை அப்லோடு செய்ய வேண்டும். பிறகு மொபைல் போனுக்கு வரும் ஓ.டி.பி (OTP) எண் மூலமாக வங்கிக்கணக்குச் செயல்பட தொடங்கும். ஆனால், இந்தக் கணக்கு தொடங்கப்பட்ட நாளிலிருந்து 12 மாதங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும்.
அதற்குள் நாம்
பயோ மெட்டிரிக் நடைமுறைகளை முடித்துவிட்டால், இந்த டிஜிட்டல் அக்கவுன்ட் சாதாரண சேமிப்புக் கணக்காக
மாறிவிடும். இந்தக் கணக்கை
18 வயதுக்கு கீழே உள்ளவர்கள் தொடங்க இயலாது. ஆண்டுக்கு 2 லட்சம் ரூபாய்க்குமேல் பணம் டெபாசிட் செய்ய இயலாது.
பேசிக் சேமிப்புக் கணக்கு ( Basic savings account)
இந்தச் சேமிப்புக் கணக்கில் 1 லட்சம் ரூபாய் வரையில்தான் சேமிக்க முடியும். அதேசமயம், மொபைல் பேங்கிங் வசதி மற்றும் கியூ.ஆர் கார்டு கிடைக்கும். இந்தச் சேமிப்புக் கணக்கில்
1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக
டெபாசிட் செய்யப்பட்டிருந்தால், அந்தத் தொகை தபால் நிலைய சேமிப்புக்கணக்குக்கு மாற்றப்படும். இதற்கு, தபால்நிலைய வங்கிச் சேமிப்புக் கணக்குடன்
(IPPB) தபால்நிலைய சேமிப்புக் கணக்கை இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதில் எத்தனை முறை வேண்டுமானாலும் பணம் டெபாசிட் செய்யலாம். ஆனால், மாதத்துக்கு நான்கு முறை மட்டுமே பணத்தை எடுக்க முடியும். இந்தக் கணக்கில் குறைந்தபட்ச இருப்புத்தொகை வைத்திருக்கத் தேவையில்லை.
ரெகுலர் சேமிப்புக் கணக்கு (Regular savings account)
தபால்நிலைய மூன்று சேமிப்புக் கணக்குகளில், இந்தச் சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்களுக்கு அதிக பலன்களை வழங்குகிறது. இதைத்
தொடங்க, தபால் நிலையத்துக்குச் செல்ல இயலாத நிலை இருந்தால், சேமிப்புக் கணக்கை போஸ்ட் மேன் மூலம் தொடங்கலாம். சேமிப்புக் கணக்கு
தொடங்கப்பட்டவுடன் பணம் டிரான்ஸ்ஃபர் மற்றும் பணம் எடுப்பது போன்றவற்றுக்கு கியூ.ஆர் கார்டு வழங்கப்படும். இதில் 10 வயதுக்கு
மேற்பட்ட சிறுவர்-சிறுமிகளும்
சேமிப்புக்கணக்கைத் தொடங்கலாம். இதைத் தொடங்க
பான் கார்டு, ஆதார் கார்டு, பயோ மெட்ரிக் நடைமுறைகள் இருந்தால் போதுமானது. இதில் பணத்தை எடுப்பதற்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை.
No comments
Post a Comment