Header Ads

Header ADS

தலைவலி முதல் காய்ச்சல் வரை அனைத்து வியாதிகளையும் தீர்க்கும் ஒரே மருந்து...! தும்பையின் பயன்கள்..!!


நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத பயனுள்ள எளிய மருத்துவத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.
 
நெஞ்சக சளி, அஜீரணம், மலச்சிக்கல் போன்ற நோய்களை சரிசெய்ய, தும்பை அற்புதமான மருந்தாகிறது.
 
தும்பை பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது.

தும்பையின் பூ, இலை, வேர் ஆகியவை அனைத்தும் நல்ல மருத்துவ பயன் அளிக்கிறது. அரிசி திப்லி உள் உறுப்புகளை தூண்டும் தன்மை கொண்டது. செரிமானத்தை சீர் செய்யும். நெஞ்சக சளியை வெளியேற்றவும் பயன்படுகிறது. இது கோடை மற்றும் குளிர்காலங்களில் வரும் தொற்றுநோய் வராமல் தடுக்கிறது.

தும்பையை பயன்படுத்தி நெஞ்சம் சம்பந்தமான கோளாறுகளை சரிசெய்யும் ரசம் தயாரிக்கலாம்.

தும்பை ரசம் செய்ய தேவையான பொருட்கள்:

தும்பை இலை, பூ, நல்லெண்ணெய், வரமிளகாய், பூண்டு, கடுகு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புளிகரைசல், மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு.

செய்முறை:

ஒரு பாத்திரத்தில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றிக்கொள்ளவும்.
இதில் கடுகு போட்டு பொறிந்ததும் வரமிளகாய், பூண்டு (பற்கள் தட்டி) போடவும்.
பின் தும்பை செடியின் இலை, பூக்களை போட்டு வதக்கவும். இதன் பின்னர் புளிகரைசல் சேர்க்கவும்.
இதில், நீர்விட்டு மஞ்சள் பொடி, பெருங்காயப்பொடி, உப்பு, மிளகுப்பொடி, சீரகப்பொடி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து லேசாக கொதிக்க வைத்து இறக்கவும்.

தும்பை ரசம் ரெடி. இந்த ரசத்தை குடித்து வர நெஞ்சக கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

எதிர்ப்பு சக்தி :
தும்பை செடி நோய் எதிர்ப்பு சக்தி உடையது.
நுண்கிருமிகளை அழிக்கும் சக்தி உடையது.
தும்பை பூ, இலையை பச்சையாக கூட சாப்பிடலாம்.
தும்பையை பயன்படுத்தி துவையல், ரசம் போன்றவை செய்து சாப்பிட்டுவர நெஞ்சக சளி, வயிற்றுகோளாறுகள், மலச்சிக்கல், பித்தம், மாதவிலக்கு பிரச்னைகள் சரியாகும்.
தலைபாரம், சீதளம் உள்ளவர்கள் தும்பைப்பூவுடன் குறைந்த அளவில் நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி, இதமான சூட்டில் தலையில் தேய்த்து சுடுநீரில் குளித்தால் உடனடி நிவாரணம் பெறலாம்.

சளி( ஜலதோஷம்), இருமல் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் தும்பைப் பூவை நீர்விட்டு கொதிக்க வைத்து, அதன் சாறை குடித்தால் பிரச்னை உடனே சரியாகும்.

தலைவலி, தலைபாரம் உள்ளவர்கள் தும்பைப்பூவை பசும்பால் விட்டு அரைத்து நெற்றியில் பூசினால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

தும்பைப்பூவை கசக்கி இரண்டு சொட்டு மூக்கில் வைத்து உள்ளே இழுத்தால் தீராத தலைவலி உள்ளவர்களுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும்.

தும்பை பூவுடன் சம அளவு மிளகு சேர்த்து மைய அரைத்து சிறுசிறு உருண்டைகளாக்கி நிழலில் காய வைத்துக்கொள்ளுங்கள். நிலவேம்பு கஷாயத்தில் இந்த உருண்டையில் ஒன்றை எடுத்து கலந்து உள்ளுக்கு சாப்பிட்டால், காய்ச்சல் உடனே நிற்கும். ஆனால், இந்த மருந்தை எடுத்துக் கொள்ளும் போது உப்பு, புளி, அசைவ உணவுகள் உண்ண கூடாது .

டைஃபாய்டு காய்ச்சல் வரும்போது ஏற்படும் கண்வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் வரும் போது,10 தும்பைப்பூக்களை தாய்ப்பாலில் ஊறவைத்து, அதை மெல்லிய துணியால் நனைத்து நெற்றி மற்றும் கன்னப்பொட்டில் பற்று போடவும். கூடவே கண்களில் இரண்டு சொட்டு விட்டால் கண்வலி, தலைவலி சரியாவதுடன் கண்களுக்கு ஒளி கிடைக்கும்.
 
குழந்தைகளுக்கு வயிற்றுக் கோளாறுகள், மாந்தம், பேதி ஆகிய பிரச்சனைகள் வந்தால், தும்பைப்பூவின் சாறு 2 சொட்டு, வேலிப்பருத்தி (உத்தாமணி) சாறு 2 சொட்டு, மிளகுத்தூள் 2 சிட்டிகை, தேன் சேர்த்து குழைத்து கொடுக்க வேண்டும்.

விஷப்பூச்சிகள் கடித்தால் தும்பைப் பூ மற்றும் தும்பை இலையை ஆகியவற்றை சம அளவில் எடுத்து நசுக்கி சாறு எடுத்து, அதில் கால் அவுன்ஸ் அளவு சாப்பிட வேண்டும். இதேபோல, பூ மற்றும் இலையை அரைத்து பூச்சிக் கடித்த இடத்தில் பற்று போட்டால் உடனே விஷம் முறிந்துவிடும்.

தும்பைப்பூவையும், தும்பை இலையையும் மையாக அரைத்து உடம்பில் பூசி ஒரு மணி நேரம் கழித்து சுட்ட சீகைக்காயுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து தேய்த்துக் குளித்து வந்தால் சொறி, சிரங்கு உள்ளவர்களின் பிரச்னை தீரும்.

பாம்பு கடித்து விஷம் தலைக்கு ஏறி மயக்கம் வந்துவிட்டால், முதலுதவியாக தும்பை இலைச்சாறை மூக்கில்விட்டு ஊதினால் சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்துவிடும். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்று உரிய சிகிச்சை அளிக்கலாம்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.