நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் அட்டை பெற அவசியமான தகவல்களில் இருந்து தந்தையின் பெயரை நீக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
நிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் அட்டை பெற அவசியமான தகவல்களில் இருந்து தந்தையின் பெயரை நீக்க வருமான வரித்துறை திட்டமிட்டுள்ளது.
இதற்கான வரைவு அறிக்கையில், பான் அட்டைக்கு விண்ணப்பிக்கும் நபர், தாயால் வளர்க்கப்படுபவராக இருந்தால் அவர் தனது விண்ணப்பத்தில் தாயின் பெயரை மட்டும் குறிப்பிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பான் அட்டைக்கான விண்ணப்பத்தில் (பார்ம் எண் 49ஏ மற்றும் பார்ம் எண் 49ஏஏ) தந்தையின் பெயரைக் குறிப்பிடுவது கட்டாயமாகும். ஆனால் தற்போதைய பரிந்துரையின்படி இனிவரும் காலங்களில் விண்ணப்பத்தில் தாய் அல்லது தந்தையின் பெயரைக் குறிப்பிடும் வகையில் மாற்றம் வரவிருக்கிறது.
தாயுடன் இருக்கும் பிள்ளைகளுக்கு பான் அட்டை விண்ணப்பத்தில் தந்தையின் பெயரை குறிப்பிடுவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு நெடுநாளாக வந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது
தொடர்பான கருத்துக்களை செட்பம்பர் 17ம் தேதி வரை தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Post a Comment