`5999 ரூபாய்க்கு ஃபேஸ் லாக், ஃபிங்கர் பிரின்ட்!’ - ரெட்மியை வம்பிழுக்கும் மைக்ரோமேக்ஸ் #YuAce - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 1, 2018

`5999 ரூபாய்க்கு ஃபேஸ் லாக், ஃபிங்கர் பிரின்ட்!’ - ரெட்மியை வம்பிழுக்கும் மைக்ரோமேக்ஸ் #YuAce


மு.ராஜேஷ்


ஷியோமியின் Redmi 5A உடன் ஒப்பிடும்போது டிஸ்ப்ளே, பேட்டரி, ஃபிங்கர்பிரின்ட் சென்சார் எனப் பல விஷயங்களில் முன்னிலையில் இருக்கிறது Yu Ace ஸ்மார்ட்போன் `5999 ரூபாய்க்கு ஃபேஸ் லாக், ஃபிங்கர் பிரின்ட்!’ - ரெட்மியை வம்பிழுக்கும் மைக்ரோமேக்ஸ் #YuAce


YU என்ற ஸ்மார்ட்போன் நிறுவனம் இந்தியாவில் இருப்பது பலருக்கு மறந்தே போயிருக்கும். கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை சில மாடல் ஸ்மார்ட்போன்களை வெளியிட்டு வந்தது. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாக YU இயங்கி வந்தது. இந்நிறுவனம் CyanogenMod இயங்குதளத்தில் அறிமுகப்படுத்திய ஸ்மார்ட்போன்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால், கடந்த சில வருடங்களாகச் சந்தையில் ஏற்பட்டிருக்கும் கடுமையான போட்டியைச் சமாளிக்க முடியாமல் YU நிறுவனம் தடுமாறியது. இந்நிலையில்  புதிய ஸ்மார்ட்போனை இப்போது அறிமுகப்படுத்தியிருக்கிறது.

மைக்ரோமேக்ஸ் YU Ace

 à®®à¯ˆà®•à¯à®°à¯‹à®®à¯‡à®•à¯à®¸à¯ YU Ace
இந்நிறுவனம் இறுதியாகக் கடந்த வருடம் செப்டம்பர் மாதத்தில் Yureka 2 என்ற ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தியது. அதன் பிறகு கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்குப் பிறகு YU Ace ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. பட்ஜெட் செக்மென்ட் வாடிக்கையாளர்களைக் குறி வைத்து இது களமிறக்கப்பட்டுள்ளது. பத்தாயிரம் ரூபாய்க்கு மொபைல் வாங்க வேண்டும் என்றால் ரெட்மி தவிர்த்து வேறு சில ஸ்மார்ட்போன்கள் தேர்வாக இருக்கின்றன. ஆனால் ஆறாயிரம் ரூபாய்க்கு என்றால் யோசிக்கக் கூட வேண்டாம் Redmi 5A தான் பலரின் தேர்வு. வெளியாகிப் பல மாதங்கள் கடந்து விட்டாலும் கூட இன்று வரை அவுட் ஆப் ஸ்டாக்கில்தான் இருக்கிறது. YU Ace ஸ்மார்ட்போனுக்கு `Forget M i. Yu Decide' என்ற டேக் லைனை வைத்து ஷியோமி நிறுவனத்தை நேரடியாகவே வம்பிழுத்திருக்கிறது yu நிறுவனம்.


YU Ace ஸ்மார்ட்போனின் வசதிகள்

ஸ்மார்ட்போன்

இப்பொழுது வெளியாகும் ஸ்மார்ட்போன்களுடன் ஒப்பிடும் போது முற்றிலும் வேறுபட்ட வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைக்கு அனைத்து மொபைல்களுமே நான்-ரிமூவபிள் பேட்டரிகள் கொண்டதாகத்தான் இருக்கின்றன. பின்புற கவரை அகற்ற முடியாது. ஆனால் YU Ace இந்த விஷயத்தில் பல ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றிருக்கிறது. இந்த மொபைலில் பின்புற கவரை அகற்ற முடியும். பேட்டரியும் ரிமூவபிள்தான். இதுவும் கூட ஒரு சிலருக்குப் பிடிக்கக் கூடும். ஆனால், அதைக் காரணமாக வைத்து பேட்டரியின் திறன் குறைக்கப்படவில்லை. 4000 mAh பேட்டரி கொடுக்கப்பட்டிருக்கிறது. 5.45 இன்ச் HD+ டிஸ்ப்ளே இதில் இருக்கிறது. இந்த விலையில் இந்த வசதியைக் கொண்ட வேறு ஸ்மார்ட்போன்கள் குறைவு.


 YU Ace  ஸ்மார்ட்போன்
 YU Ace  ஸ்மார்ட்போன்
Redmi 5A உடன் ஒப்பிடும்போது டிஸ்ப்ளேவின் அளவு சற்று அதிகம். பேட்டரியின் அளவும் அதிகம். ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தில் இயங்கும், இதற்கு அடுத்த வெர்ஷனான பை அப்டேட் தரப்படும் என்றும் நிறுவனம் உறுதியளித்திருக்கிறது. குவாட் கோர் 1.5 GHz திறன் கொண்ட மீடியாடெக் MT6739WW புராசஸர் இதில் இருக்கிறது. 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்ட இதில் 128 ஜிபி வரை மெமரி கார்டை பயன்படுத்திக்கொள்ள முடியும். Redmi 5A ஸ்மார்ட்போனுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் டிஸ்ப்ளே, பேட்டரி, இயங்குதளம் எனப் பல விஷயங்களில் முன்னிலையில் இருக்கிறது YU Ace. முக்கியமாகக் குறிப்பிட்டு கூற வேண்டுமென்றால் Redmi 5A-வில் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கிடையாது, ஆனால் இதில் அதோடு சேர்த்து ஃபேஸ் அன்லாக் வசதியும் தரப்பட்டுள்ளது. YU Ace ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் 5,999 ரூபாய்க்குக் கிடைக்கும். வசதிகளைப் பொறுத்தவரையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் இன்னும் மக்களிடமிருந்து வரும் ரிவ்யூஸ் மட்டுமே மிச்சம். அதுவும் நல்ல முறையில் வந்தால் YU ஸ்மார்ட்போன்கள் மீண்டும் ஒரு முறை சந்தையைக் கலக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

No comments: