51 படிப்புகளில் 3 படிப்புகளுக்கு மட்டுமே யுஜிசி அனுமதி: சென்னைப் பல்கலைக்கழகம் அறிவிப்பு
*இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் ஆர்.ஸ்ரீநிவாசன் புதன்கிழமை வெளியிட்ட பொது அறிவிப்பு
*யுஜிசி-யின் தொலைநிலைக் கல்வி ஒழுங்குமுறை 2017' என்ற படிவத்தின்படி, நாட்டில் உள்ள ஒருசில பல்கலைக்கழகங்கள் மட்டுமே தொலைநிலைக் கல்வி நடத்த முடியும். அதில் சென்னைப் பல்கலைக்கழகமும் ஒன்று
*இந்தப் புதிய நடைமுறையின்படி, சென்னை பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி நிறுவனம் மூலம் வழங்கப்படும் 51 இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளுக்கு அனுமதி வழங்க யுஜிசி-யிடம் விண்ணப்பிக்கப்பட்டது
*அதில், 3 படிப்புகளுக்கு யுஜிசி அனுமதி அளித்தது. மற்ற படிப்புகளுக்கு சில குறைபாடுகளை நிவர்த்தி செய்தால் அனுமதி அளிக்கப்படும் என யுஜிசி அறிவுறுத்தியது
*அதன்படி, குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு யுஜிசி-யிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
*எனவே, இன்னும் ஒரு வாரத்தில் மற்ற படிப்புகளுக்கும் அனுமதி கிடைத்து விடும் என நம்புவதாக பொது அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments
Post a Comment