3 நாட்களாக நடைபெற்ற பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டம் வாபஸ் பெற்றது ஏன்?
அரசு
மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2012ம் ஆண்டு நியமிக்கப்பட்ட சிறப்பு ஆசிரியர்கள் தொகுப்பு ஊதிய அடிப்படையில் 7 ஆண்டுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் அந்த
ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியத்துக்கு மாற்ற வேண்டும் என்று கேட்டு போராடி வருகின்றனர்.
கடந்த 25ம் தேதி
காலை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலையில் உள்ள டிபிஐ வளாகத்திற்கு வந்த
500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அங்குள்ள அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அலுவலகத்தின் முன் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் ஆசிரியர்கள்
தொடர்ந்து 3 நாட்களாக டிபிஐ வளாகத்தில்
முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், தொகுப்பு ஊதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய முடியாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று முன்தினம் தெரிவித்தார்.
இதற்கு பிறகும் நேற்று போராட்டத்தை ஆசிரியர்கள் தொடர்ந்தனர்.
இதனால் நுங்கம்பாக்கம் போலீசார் அவர்களை
கைது செய்து பல்வேறு வாகனங்களில் ஏற்றிச் சென்றனர். அவர்களை சென்ட்ரல் ரயில் நிலையம், கோயம்பேடு
பஸ் நிலையம் என பல்வேறு இடங்களில் போலீசார் இறக்கிவிட்டுச் சென்றனர். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக தமிழக பகுதி நேர சிறப்பாசிரியர்கள் சங்கத்தின் தலைவர் சேசுராஜா அறிவித்தார்
No comments
Post a Comment