தேர்தல் பரீட்சை; 323 அதிகாரிகள், 'பெயில்'!
மத்திய பிரதேச மாநிலத்தின், 230 சட்டசபை தொகுதிகளுக்கு, விரைவில் தேர்தல் நடக்க உள்ளது. சமீபத்தில், இந்த மாநிலத்தில், தேர்தல் பணிகள் தொடர்பான தேர்வை, தேர்தல் ஆணையம் நடத்தியது.
இந்த
தேர்வை, சட்டசபை தேர்தல் பணிகளுக்கு நியமனம் செய்யப்பட்டு உள்ள, 700 அதிகாரிகள் எழுதினர்.
இதில், 323 அதிகாரிகள் தேர்ச்சி பெறவில்லை. இவர்களில் பெரும்பாலானோர், போபால், சிஹோர், குணா, இந்துார் உள்ளிட்ட முக்கிய இடங்களில், பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.மேலும், துணை கலெக்டர், சப் - டிவிஷனல் மாஜிஸ்திரேட், தாசில்தார் ஆகிய நிலைகளில் உள்ள அதிகாரிகள் கூட, இந்த தேர்வில் தேர்ச்சி பெறவில்லை. ஒருசில அதிகாரிகளுக்கு, அடிப்படை பற்றி கூட தெரியவில்லை.
இது
குறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: இந்த விவகாரம், மிகப்பெரிய பிரச்னை. தேர்தல் ஆணையம் நடத்திய தேர்வில், 300க்கும் மேற்பட்ட அதிகாரிகள் தோல்வி
அடைந்துள்ளனர். இவர்களால், எப்படி நியாயமான தேர்தலை நடத்த முடியும்? இது குறித்து, தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்தி, விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதற்கிடையே, மத்திய பிரதேச மாநிலத்தில், வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்துள்ளதாக, காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது.
No comments
Post a Comment