Header Ads

Header ADS

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் டிஏ உயர்வு -தமிழக அரசு ஊழியர்களுக்கு எப்போது ?


மத்திய அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி (டிஏ)உயர்த்தப்பட்டதுபோல தங்களுக்கும் உயர்த்தப்படுமா என தமிழக அரசுஊழியர்கள், ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். மத்திய, மாநில அரசு
 ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்துடன், அகவிலைப்படியும் சேர்த்துவழங்கப்படுகிறது.
 
இந்த அகவிலைப்படி ஒவ்வொரு 6 மாதங்களுக்கு ஒரு முறைஉயர்த்தப்படுவது வழக்கம். ஜனவரி,ஜூலை ஆகிய மாதங்களில்அகவிலைப்படி உயர்வு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

 மத்தியஅரசு அகவிலைப்படியை உயர்த்திய உடன் மாநில அரசுஊழியர்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் அகவிலைப்படியை உயர்த்தி அறிவிக்கும்.இதனால் தங்களுக்கு எப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும் என மாநில அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

 தற்போது மத்திய அரசு ஊழியர்களான நமது மாநிலத்தில் பணிபுரியும் IAS,IPS ,IFS  அலுவலர்களின் DA வை 2% உயர்த்தி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது .

இந்த மாத ஊதியத்துடன்அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுமா என அரசு ஊழியர்கள்எதிர்பார்க்கின்றனர்.எனவே தமிழகத்திலும் 2 சதவீதம்அகவிலைப்படியை உயர்த்தி இந்த மாத ஊதியத்துடன் வழங்கவும்,அகவிலைப்படி நிலுவைத்தொகையை சேர்த்து வழங்கவும் தமிழகமுதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.