Header Ads

Header ADS

பள்ளி வளர்ச்சி நிதி மற்றும் தமிழக அரசின் சிறப்பு தன்னிறைவுத்திட்டம் மூலமாக சுமார் 2 இலட்சம் செலவில் பட்டைய கிளப்பும் வகுப்பறை


தகவல்-திரு.சண்முகம் ஆசிரியர் -9566729205
(10.9.2018) கோபி ஊராட்சி ஒன்றியநடுநிலைப்பள்ளி, பெருந்தலையூரில் வண்ணமயமான வகுப்பறை திறப்புவிழா நடைபெற்றது.

பள்ளி வளர்ச்சி நிதி மற்றும் தமிழக அரசின் சிறப்பு தன்னிறைவுத்திட்டம் மூலமாக சுமார் 2 இலட்சம் செலவில் வண்ண இருக்கைகள், வட்ட மேசைகளும்  வாங்கப்பட்டுள்ளது. தரைஓடுகள் - 75,000,
Smart TV - 30,000( இண்டிகெம் ஸ்போர்ட்ஸ் கிளப்) முதல் வகுப்பிற்கு
Flex மற்றும் வண்ணம் பூச வகுப்பு ஆசிரியை திருமதி ஸ்டெல்லா அவர்கள் 15,000ரூபாய் செலவு செய்துள்ளார்.

விழாவிற்கு பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இரா.சரவணன் அவர்கள் தலைமை ஏற்றார். பள்ளி தலைமை ஆசிரியை இரா.மாரியம்மாள் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். முதல் & இரண்டாம் வகுப்பு வகுப்பறையை வட்டார கல்வி அலுவலர்  திருமதி .பானுமதி அவர்கள் திறந்துவைத்து வாழ்த்துரை வழங்கினார். மூன்றாம்& நான்காம் வகுப்பு வகுப்பறையை மேற்பார்வையாளர் பொறுப்பில் உள்ள திரு எஸ்.ரவி அவர்கள் திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். மேலும் ஆசிரியர் பயிற்றுனர் திருமதி பூ..திலகம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

மேலும் சுதந்திர தினவிழாவில், சிறந்த தலைமை ஆசிரியராக பணியாற்றியமைக்காக மாவட்ட ஆட்சியர்  அவர்களிடம் பாராட்டு சான்றிதழ் பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் திருமதி இரா.மாரியம்மாள் அவர்களுக்கும், தன் வகுப்பறைக்காக ₹15000 செலவு செய்த ஆசிரியை திருமதி சி.ஸ்டெல்லா அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி பாராட்டு செய்யப்பட்டது. விழாவிற்கு பெற்றோர்கள், ஊர்பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். பட்டதாரி ஆசிரியர் திரு ஜி.கே.வரதராஜன் அவர்கள் நன்றியுரை வழங்கினார். இறுதியில் தேசிய கீதத்துடன் விழா இனிதே முடிவுற்றது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.