சிறப்பு ஆசிரியர் நியமனத்திலும் முறைகேடு... 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் கலை ஆசிரியர்கள்! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 8, 2018

சிறப்பு ஆசிரியர் நியமனத்திலும் முறைகேடு... 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் கலை ஆசிரியர்கள்!


ஞா. சக்திவேல் முருகன்
"சிறப்பு ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், ஆசிரியர் பயிற்சியிலிருந்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை. முழுக்க முழுக்க கவின்கலைகள் குறித்தே அதிகளவில் கேள்விகள் இடம்பெற்றன."
சிறப்பு ஆசிரியர் நியமனத்திலும் முறைகேடு... 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் கலை ஆசிரியர்கள்!
"பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் நடந்ததுபோலவே, ஆசிரியர் தகுதித்தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது. இதுகுறித்து முறையாக விசாரிக்கப்படும்" என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இந்நிலையில், ``உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்களை நியமிக்க நடந்துவரும் சான்றிதழ் சரிபார்ப்பிலும், பல்வேறு முறைகேடுகள் நடந்துவருகின்றன'' என்கின்றனர்  கலை ஆசிரியர்கள்.

ஆசிரியர்கள் தேர்வு
 à®šà®¿à®±à®ªà¯à®ªà¯ ஆசிரியர் நியமனத்திலும் முறைகேடு... 20 ஆண்டுகளாகக் காத்திருக்கும் கலை ஆசிரியர்கள்!
பள்ளிகளில் நீண்டகாலமாக நிரப்பப்படாமல் இருக்கும் உடற்கல்வி, ஓவியம், இசை, தையல் ஆசிரியர்களை நியமிக்க, தகுதித்தேர்வை நடத்தியது தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரியம். மொத்தம் 35,781 பேர் தேர்வு எழுதினர். இதில் தேர்ச்சிபெற்ற 2,500 பேருக்கும் மேற்பட்டவர்கள், சான்றிதழ் சரிபார்ப்புக்காக அழைக்கப்பட்டுள்ளனர். `சான்றிதழ் சரிபார்ப்பில் பெரிய அளவில் தில்லுமுல்லு நடக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும்' என 11 ஆசிரியர்கள் உயர் நீதிமன்றத்தை அணுகியுள்ளனர். என்ன மாதிரியான தில்லுமுல்லு நடக்கிறது என்பது குறித்து ஆசிரியர்களிடம் பேசினோம்.
 

வில்லியம் டேனியல்ஓய்வுபெற்ற ஓவிய ஆசிரியர் வில்லியம் டேனியல், ``அரசு தொழில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள், கடந்த 20 ஆண்டுகளாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருக்கின்றனர். இவர்கள் அரசு நடத்திய தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படவில்லை. பயிற்சி பெறாதவர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கான முயற்சி நடந்துவருகிறது.

முறையாக ஓவியப் பயிற்சி  (Free Hand Outline and Model Drawing Hr) பெற்று, அதன்பிறகு அரசு நடத்தும் Technical Teachers Certificate Course-யையும், இதற்கான தேர்வையும் முடித்து அரசு வேலை கிடைக்கும் எனப் பல ஆண்டுகளாகக் காத்திருக்கின்றனர். இவர்கள் அரசு நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்காமல், முறையான தொழிற்கல்வி ஆசிரியர் பயிற்சி பெறாத கவின் கலைக்கல்லூரியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது எந்த வகையில் ஏற்புடையது எனத் தெரியவில்லை. 
 à®µà®¿à®²à¯à®²à®¿à®¯à®®à¯ டேனியல்
கவின் கலைக்கல்லூரியில் படித்தவர்கள் வேலைவாய்ப்பு பெற போட்டியிடலாம். தவறில்லை. ஆனால், இவர்கள் தொழில் ஆசிரியர் பயிற்சி பெற்றிக்கவேண்டியது அவசியம். இதைப் பெறாமலேயே தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சிபெற்றுள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியமும் இவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைத்துள்ளனர். இவர்கள் வெற்றி பெற்றதற்குக் காரணம், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட தேர்வின் கேள்வித்தாளைத் தயாரித்ததும் இவர்களுடைய கல்லூரி ஆசிரியர்களே. இதனால் அங்குப் படித்தவர்கள் நிறையபேர் தேர்ச்சிபெற்றுள்ளனர்" என்றார்.
 à®Žà®¸à¯.ஏ.ராஜ்குமார்
எஸ்..ராஜ்குமார்கலை ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்..ராஜ்குமார், ``ஓவிய ஆசிரியர்கள் நியமனத்தைப்போலவே, தையல் ஆசிரியர்கள் நியமனத்திலும் பிரச்னைகள் இருக்கின்றன. தையல் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் சிலர் இரண்டுவிதமான சான்றிதழ்களை வைத்துள்ளனர். ஒன்று, அரசு நடத்திய தொழில் ஆசிரியர் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ். இதை அரசு தேர்வுத் துறைதான் வழங்குகிறது. இரண்டாவது, வேலைவாய்ப்பு அலுவலகம் நடத்திய தொழில்பயிற்சிக்கான சான்றிதழ். தற்போதைய சான்றிதழ் சரிபார்ப்பில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பயிற்சி பெற்றவர்களே அதிக அளவில் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தொழில் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளதாக விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதனால் இவர்களே அதிக அளவில் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர். தொழில் ஆசிரியர் பயிற்சியை முறையாகப் பெற்றவர்களை அழைக்காமல், இவர்களை அழைத்தது எந்த வகையில் நியாயம். யார் வேண்டுமானாலும் தேர்வு எழுதி தேர்ச்சி பெறலாம் என்றால், எல்லோரும் தேர்வு நடத்துவதுபோல்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் தேர்வு நடத்தியிருக்கலாம்.
 
சிறப்பு ஆசிரியர்கள்
 à®šà®¿à®±à®ªà¯à®ªà¯ ஆசிரியர்கள்
மேலும், சிறப்பு ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தகுதித் தேர்வில், ஆசிரியர் பயிற்சியிலிருந்து ஒரு கேள்வியும் கேட்கவில்லை. முழுக்க முழுக்க கவின்கலைகள் குறித்தே அதிகளவில் கேள்விகள் இடம்பெற்றன. இதிலும் பல கேள்விகள் தவறுதலாக இருந்தன.  `ஐந்து கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருக்கின்றன' என நானே சுட்டிக்காட்டினேன். இதற்கு, கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளனர். இதுபோல பல முறைகேடுகளுக்கு மத்தியில்தான் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடந்துவருகிறது. கடந்த 20 வருடங்களாக வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களின்  நிலையை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது" என்றார்.

No comments: