+2 வில் 80% இல்லை என்றால்"வெளிநாட்டு மருத்துவகல்லூரியில் சேர தகுதிசான்று கிடையாது: உயர்நீதிமன்றம் அதிரடி! - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Saturday, September 29, 2018

+2 வில் 80% இல்லை என்றால்"வெளிநாட்டு மருத்துவகல்லூரியில் சேர தகுதிசான்று கிடையாது: உயர்நீதிமன்றம் அதிரடி!


பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று உத்தரவுவிட்டுள்ளது.
 

சென்னை உயர் நீதிமன்றம் பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிச் சான்று வழங்க கூடாது என்று மத்திய அரசுக்கும், இந்திய மருத்துவ கவுன்சிலுக்கும் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பான வழக்கில் விசாரித்த உயர்நீதிமன்றம் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதிகள் குறித்து விளக்கம் அளித்த இந்திய மருத்துவக் கவுன்சில், நீட் தேர்வில் தேர்ச்சி மற்றும் பிளஸ் 2 தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியியல் ஆகிய பாடங்களில் 50 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்தது.


மேலும் இந்தியாவில் தேர்வில் 90 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவரால் மருத்துவ படிப்பில் சேர முடியாத இந்தநிலையில் வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர தகுதி மதிப்பெண்களை 80 சதவீதமாக நிர்ணயிக்க நீதிபதி உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: