பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் பெயர்கள் மாற்றம் பள்ளிக் கல்வி பரிந்துரை - TAMNEWS

EDUCATION NEWS AND EMPLOYMENT NEWS

WHATSAPP

WHATSAPP

Sunday, September 30, 2018

பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் பெயர்கள் மாற்றம் பள்ளிக் கல்வி பரிந்துரை



மாணவர்களின் உயர்கல்வி வசதிக்காக, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2வில், பல்வேறு பாடங்களின் பெயர்களை மாற்றி, சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வித்துறை பரிந்துரை செய்துள்ளது.தமிழகத்தில், 13 ஆண்டுகளுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட பாடப்பிரிவுகளில், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்தப்படுகின்றன. சிக்கல்அந்த பாடங்களின் பெயரிலேயே, தேர்வுத்துறையால் சான்றிதழ் வழங்கப்படுகிறது. ஆனால், பல பாடங்களின் பெயர்களால், தற்போதைய உயர்கல்வி நிறுவனங்களில், மாணவர்கள் சேர்வதில் சிக்கல் ஏற்படுகிறது.உதாரணமாக, டில்லியில் செயல்படும், ஸ்ரீராம் வணிகவியல் கல்லுாரி மற்றும் லேடி ஸ்ரீராம் வணிகவியல் பெண்கள் கல்லுாரி ஆகியவற்றில், தமிழக வணிக கணித மாணவர்கள் சேர முடியவில்லை. அவர்களின் சான்றிதழில், புள்ளியியல் பாடம் இல்லை என, விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுகின்றன.மாணவர்கள் வணிக கணிதத்துடன், புள்ளியியல் பாடம் படித்திருந்தாலும், சான்றிதழில் அந்த பெயர் வராததால், மாணவர்கள் உயர்கல்வி சேர்க்கைக்கு அனுமதிக்கப்படவில்லை.இது குறித்த, பெற்றோரின் கருத்துக்கள் அடிப்படையில், சில பாடங்களுக்கு பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்த பாடங்களுக்கான தேர்விலும், புதிய பெயரிலேயே சான்றிதழ் வழங்க வேண்டும் என, அரசு தேர்வுத் துறைக்கு, பள்ளி கல்வித் துறை கடிதம் அனுப்பியுள்ளது.பரிந்துரைபாடத்தின் பெயர் மாற்ற அடிப்படையில், சான்றிதழ்களை வழங்கும்படி, அரசு தேர்வுத்துறைக்கு, பள்ளி கல்வியின் பாடத்திட்ட மேலாண்மை பிரிவான, மாநில கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. முதல்கட்டமாக, பிளஸ் 1க்கு இந்த ஆண்டும், பிளஸ் 2வுக்கு அடுத்த ஆண்டும், சான்றிதழ்களில் பெயர் மாற்றம் இடம் பெறும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

No comments: