Header Ads

Header ADS

TNTET தகுதித்தேர்விற்கான அறிவிப்பு எப்போது?


அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிட முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும்.

இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு) ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார்.


ஆனால் தற்போது தேர்விற்கு 37 நாள் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எப்போதுமே தேர்விற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பதற்கான செயல்பாடுகள் துவங்கும்.

பின் கடைசிதேதி, தேர்வு கட்டணம் செலுத்தும்தேதி அறிவிக்கப்பட்டு இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால் தேர்விற்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில் இதுவரையில் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்காததால் ஆசிரியராக ஆவதற்காக கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.


No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.