Header Ads

Header ADS

சுதந்திர தினத்தில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தை Photo எடுத்து Workplace @ Facebook இல் வெளியிட உத்தரவு.


சுதந்திர தினத்தன்று விழா முடிந்ததும், பெற்றோர்
- ஆசிரியர் கழக கூட்டம் நடத்தி, புகைப்படங்களை அனுப்ப வேண்டும் என்று
தலைமை ஆசிரியர்களுக்கு மாநில பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது
பள்ளிக்கல்வி துறை சார்பில், இயக்குனர் வி.சி.ராமேஸ்வரமுருகன், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதம்



72வது சுதந்திர தினத்தை வரும் 15ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் மிகவும் சிறப்பாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பள்ளிகளில் நமது இந்தியாவின் சுதந்திர போராட்ட வரலாற்றையும், சுதந்திர போராட்ட வீரர்கள் செய்த தியாகங்களையும், அவர்கள் பட்ட இன்னல்களையும், மாணவர்களுக்கு எடுத்துரைத்து உணர்வு பூர்வமாக கொண்டாட வேண்டும்
பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்துதல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு முக்கிய பங்கு வகிக்கிறது.



நடப்பு கல்வி ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் அனைத்துப் பள்ளிகளிலும் பெற்றோர்- ஆசிரியர் கூட்டம் முறையாக நடத்தப்பட வேண்டும்
எனவே, ஆண்டுதோறும் இதனடிப்படையில், இந்தியாவின் 72வது சுதந்திர தின நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றவுடன், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டம் நடத்தப்பட வேண்டும்
இக்கூட்டத்தில் மாணவர்களின் வருகை, கற்றல் கற்பித்தல் பணிகள் மற்றும் அடைவு திறன் குறித்தும், பள்ளியின் வளர்ச்சி சார்ந்த நடவடிக்கைகள்(மின்னல் கல்விச் செய்தி) குறித்தும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் தேவைகளை கேட்டறிதல் சார்ந்தும் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.நிகழ்ச்சிகள் நிறைவுற்றவுடன், பெற்றோர் - ஆசிரியர் கழகக் கூட்டம் நடத்தப்பட்டது தொடர்பான புகைப்படங்களை தலைமையாசிரியர்களது ''லாக் இன்'' மூலம், ''ஒர்க் பிளேஸ்''ல் பதிவேற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.