Header Ads

Header ADS

Emis பணி மேற்கொண்டுள்ள சக ஆசிரியர்களது பணியை எளிமை படுத்தும் நோக்கில்.. சில தகவல்கள்..!


2018-2019 ஆம் கல்வியாண்டில்.. (இக்கல்வியாண்டு) பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
(இருப்பினும் ஒருமுறை open செய்து recheck பண்ணிக்கவும்.)

2017-2018ல் பதிவு செய்யப்பட்ட மாணவர்களது (தற்போது இரண்டாம் வகுப்பு) தகவல்களும் முழுமையாக இருக்கும்.

👉🏻mதற்போது..
மூன்று, நான்கு மற்றும் ஐந்து.. மேலதீக வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கே கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.
 
STEP 1
ஆதாரில் உள்ளபடி ஆங்கிலத்தில்
ஆதாரில் உள்ளபடி தமிழில்
பள்ளி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி ஆங்கிலத்தில்
பள்ளி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி தமிழில்

*உதாரணமாக:

ஆதாரில் தகப்பனார் பெயரோடு இணைந்து நிர்மலா சீதாராமன் என்றிருக்கும்.

அதனை அவ்விதமே ஆதாரில் உள்ளபடி என்கிற..காலத்தில் பதிவிட்டு விடுக.

ஐடி கார்டு என்கிற காலத்தில்.. சீ.நிர்மலா என்று பதிவிட்டுவிடுக.

STEP 2
முதல், இரண்டு வகுப்புகளுக்கு Father, mother occupation இருக்கும்.

ஏனைய வகுப்புகளுக்கு உள்ளீடு செய்க.
 
STEP 3
முகவரி சரியாக உள்ளதை உறுதிபடுத்திக் கொள்க

STEP 4
முதல், இரண்டு வகுப்புகளுக்கு Date of joining உள்ளது.

ஏனைய வகுப்புகளுக்கு உள்ளீடு செய்தாக வேண்டும்.

மேற்கண்ட பணிகள் முடிவடைந்த நிலையில்..  step4ல் உள்ள UPDATEனை முடிவில் click  செய்க.

இவைகள் அல்லாது எக்கலமேனும் விடுபட்டுள்ளதா என கவனமுடன் நோக்குக.

தேக்கப்பட்டியல்.. அட்மிசன் பார்ம்..
ஆதார் ஜெராக்ஸ்.. ஆகியவற்றை முன்னேற்பாடாக அருகல் வைத்துக் கொண்டால்.. பணி முடிக்க எளிதாக இருக்கும்.

அல்லது

ஆதார் ஜெராக்ஸில் ஒரு மூலையில்..

வகுப்பு/சே.எண்/ சேர்ந்த தேதி குறிப்பிட்டு முன்னேற்பாடு செய்து கொள்வதும் மேற்கண்ட எமிஸ் பணியை எளிதாக்கும்.
 
குறிப்பு:
ஆதாரில் குறிப்பிட்டுள்ள பிறந்ததேதியும்.. பள்ளியில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியும் முன்னுக்குபின் முரணாக சிலருக்கு உள்ள வாய்ப்பும் நேர்ந்துள்ளது.

எனவே.. பிறந்ததேதியை உறுதிபடுத்துக. தவறாக இருக்கும் பட்சத்தில் சார்ந்த பெற்றோரை அழைத்து.. ஆதாரை திருத்தம் செய்திட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்திடுக.

No comments

WHATSAPP

WHATSAPP
Powered by Blogger.